இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது அவர் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது சார்லசுக்கு மோடி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இரு நாடுகள் இடையிலான வரலாற்று தொடர்பு, பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையே உள்ள ஆழமான ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது சார்லஸ் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா-இங்கிலாந்து உறவுகளை வலுப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |