2018, 2019களில் BSNL நலிவுற்று இருந்தது.BSNL க்கஉரிய நிவாரணம் வழங்கி BSNLஐ புத்தாக்கம் (revival) செய்ய மோடி அரசு முடிவெடுத்தது. அதன்படி 2019ல் BSNLக்கு ரூ 70,000 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. BSNL மேற்கொண்ட ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கான நிதி இந்த நிவாரணத்தின்
மூலம் கிடைத்தது. அடுத்து ஜூலை 2022ல் மோடி அரசு BSNLக்கு மற்றுமொரு நிவாரணமாக (revival package) ரூ 1.64 லட்சம் கோடியை அறிவித்தது. இவ்விரண்டு நிவாரணங்களின் மூலம் BSNL மோடி அரசிடம் இருந்து ரூ 2.34 லட்சம் கோடி பெற்றுள்ளது.
BSNLன் நிதிநிலைமையைச் சீராக்குவதையும், 4G சேவையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த இரண்டாவது நிவாரணம் வழங்கப் பட்டது. நிவாரணங்களுக்கு முடிவு இல்லை போலும்! ஜூன் 2023ல்
மூன்றாவது நிவாரணமாக ரூ 89,047 கோடியை BSNLக்கு மோடி அரசு வழங்கியது.
முதல் நிவாரணம் 2019 = ரூ 70,000 கோடி 2ஆம் நிவாரணம் 2022 =ரூ 1.64 லட்சம் கோடி 3ஆம் நிவாரணம் 2023 = ரூ 89,047 கோடி மொத்தம் = ரூ 3.23 லட்சம் கோடி.
மனிதகுல வரலாற்றில் எந்த ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கும் ஒரு அரசு ரூ 3.23 லட்சம் கோடி
நிவாரண உதவியை வழங்கியதில்லை. BSNL நிறுவனம் 01.10.2000ல் தொடங்கப் பட்டது.
அது தொடங்கிய நாள் முதலே அது தனியாருக்கு விற்கப்படும் என்று ஆருடம் கூறிக் கொண்டே
இருந்தார்கள் மார்க்சிஸ்டு சார்பு தொழிற்சங்கத்தினர். இன்று 25 ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தத்
தனியாருக்கும் BSNL விற்கப்படவில்லை எனறு அனைவரும் அறிவர்.
BSNLல் மீண்டும் ஒரு விருப்ப ஓய்வுத் திட்டத்தைக் கொண்டு வந்து ஓரளவு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விட்டு, அதன் பிறகு BSNLஐ அதானிக்கு விற்கப் போகிறது மோடி அரசு என்று மார்க்சிஸ்ட் சமூக விரோதிகள் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். இதில் துளியும் உண்மை இல்லை. மூன்றேகால் லட்சம் கோடி ரூபாயை BSNLல் மோடி அரசு முதலீடு செய்திருப்பது அதை அதானியிடம் விற்பதற்கு அல்ல. இது உணர்ந்து கொள்ள robust common sense எதுவும் தேவையிலில்லை. குறைந்தபட்ச காமன் சென்ஸ் இருந்தாலே போதும்.
மோடி 2,0 காலக்கட்டத்தில் பொதுத்துறை நிறுவங்கங்கள் குறித்த ஒரு கோட்பாடு (PSE Core Policy) வகுக்கப் பட்டது. இதன்படி ஒரு தொழில்துறையில் குறைந்தது ஒரு பொதுத்துறை நிறுவனமாவது இருக்க வேண்டும் என்றும் இதை மத்திய அரசுஉறுதி செய்ய வேண்டும் என்றும்
மோடி அரசு கூறியது.
டெலிகாம் துறையில் அம்பானி, சுனில் மிட்டல், டாட்டா, பிர்லா ஆகியோரின் நிறுவனங்கள் இருக்கின்றன.
இத்துறையில் ஒரு பொதுத்துறை நிறுவனமானது இருக்க வேண்டும். எனவே இங்கு BSNL நிறுவனம் இருக்கும்; இருக்க வேண்டும். இதுதான் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த மோடி அரசின் பிரதான கொள்கை (Core policy)
பின்னாளில் மோடி அரசு இந்த core policyஜக் கைவிட்டாலும் BSNLக்கு எந்த ஆபத்தும் இல்லை. ராணுவ ரகசியங்களையும்அரசின் ரகசியங்களையும் பாதுகாக்க BSNL நிறுவனம் பொதுத்துறையில் நீடிக்க வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. எனவே BSNL ஒருபோதும் எந்தத் தனியாருக்கும் விற்கப் பட மாட்டாது.இந்த யுகம் முழுவதும் BSNL அரசுத் துறையாகவே நீடிக்கும்.
வதந்திகளைப் பரப்புவோரை இகழ்ச்சியுடன் நிராகரிப்போம். BSNL ஜிந்தாபாத்!
நன்றி பி. இளங்கோ சுப்பிரமணியன் சென்னை நியூட்டன் அறிவியல் மன்றம்
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |