“பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2008 முதல் மத்திய அரசு சார்பில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தேசிய பெண் குழந்தைகளின் தினத்தையொட்டி பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகள் சாதனை புரிவதன் வாயிலாக, இந்தியா பெருமை கொள்கிறது. பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து அதிகாரம் அளிக்கவும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உருவாக்கி தருவதிலும், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
அவர்களின் சாதனைகள், நம் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளன.
கல்வி, தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக, பெண் குழந்தைகளின் திறமைகளை மேம்படுத்த, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை போக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |