பாஜக வில் மட்டும் தான் பூத் பணியாளர்கள் பிரதமாகும் வாய்ப்பு – விஜயேந்திரா

”பா.ஜ.,வில் மட்டும் தான் பூத் பணியாளர்கள் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி 100வது பிறந்த நாளை, ‘நல்லாட்சி தினமாக’ பா.ஜ., கொண்டாடி வருகிறது. இதையொட்டி, கட்சி அலுவலகத்தில் வாஜ்பாயி புகைப்பட கண்காட்சியை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா துவக்கி வைத்தார்.

பின், விஜயேந்திரா பேசியதாவது:

கட்சியின் மூத்த தலைவர்கள் எடியூரப்பா, மறைந்த மத்திய அமைச்சர் அனந்த குமார் ஆகியோரின் கடின முயற்சியால், கர்நாடகாவில் பா.ஜ., வளர்ந்து பலத்துடன் இருக்கிறது. இவர்களுக்கு பின்னால், லட்சக்கணக்கான தொண்டர்கள், தங்களின் நேரம், பணத்தை துறந்து பணியாற்றினர். பா.ஜ., வளர்ந்துள்ளதை கட்சியின் கட்டடத்தை பார்த்தாலே தெரியும். ஆனால் இதற்கான அடித்தளம் அமைத்ததை பார்க்க முடியாது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை நினைவில் கொள்ள வேண்டும்.

பா.ஜ.,வில் மட்டுமே பூத் அளவிலான ஊழியரும் கூட, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடியின் நடவடிக்கையால், வாஜ்பாயின் பிறந்த நாளை, ‘நல்லாட்சி தினமாக’ கொண்டாடுகிறோம்.

கர்நாடகாவில் 1999ல் ஜே.எச்.பாட்டீல் தலைமையிலான அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில், வாஜ்பாயியும் பங்கேற்றார்.

அதுபோன்று ஹூப்பள்ளியில் நடந்த போராட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடியதை பார்த்த வாஜ்பாய், ஆச்சரியமடைந்தார். புதுடில்லிக்கு புறப்படும் முன்பு, எடியூரப்பாவை கட்டி அணைத்து வாழ்த்துத் தெரிவித்தார். இத்தகைய தலைவரை, எங்கும் பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...