தமிழகத்திலும் ப .ஜ.க. ஆட்சி அமைக்கும் -நிர்மலா சீதாராமன் உறுதி

தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்க, கடந்த 6 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன, ” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை கொட்டிவாக்கம் கடற்கரையில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாமில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். அதற்கான பணிகள் 6 ஆண்டுகளாக பெரிய அளவில் நடக்கிறது. சில குடும்பங்களுக்கு மட்டும் பதவி என்பது பா.ஜ.,வில் இருக்காது. எளியவரும் பெரிய தலைவர் ஆகலாம்.

மிகப்பெரிய கட்சி என்றால் அது பா.ஜ., தான்.பெரிய கட்சி என்றால் அதிக உறுப்பினர்கள் இருக்கறார்கள் என்று அர்த்தம். ஜாதி, மதம், சிறியவர், பெரியவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் கட்சி பா.ஜ., மட்டும் தான்.மகன், மாமா, மாப்பிள்ளை தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்ன?பா.ஜ., திறமை உழைப்புக்கு போதுமான வாய்ப்பு வழங்கும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும்.

மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் கொண்டு வந்தது பிரதமர் மோடிதான். பா.ஜ., ஆட்சியில் மீனவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. மீனவர்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தினால், அவர்களுக்கு 3 மடங்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா – சவூதி அரேபியா உறவுக ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை பியுஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமா ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமானார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோ ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோடி காங்கிரசை சாடல் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முத ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம் L. முருகன் கேள்வி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார் குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, ...

நகர்ப்புற நக்ஸல்களை அடையாளம் க ...

நகர்ப்புற நக்ஸல்களை அடையாளம் கண்டு அவர்களின் முகமூடியை மக்கள் கிழித்தெறிய வேண்டும் – மோடி பேச்சு நகர்ப்புற நக்சல்களை அடையாளம் கண்டு, அவர்களின் முகமூடியை மக்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...