கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 12,815 கோடி அளவுக்கு பாதுகாப்புதளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. 61 நாடுகளுக்கு இப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் சிலஉத்திகள் காரணமாக அந்த நாடுகளின் பெயர்கள் வெளியிடப் படவில்லை.
கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.10,746 கோடிக்கும், 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.9,116 கோடிக்கும் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.8,435 கோடிக்கும் பாதுகாப்புதளவாடப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதம் வரை ரூ.1,387 கோடி அளவிற்கு பாதுகாப்பு தளவாடப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாநிலங்களவையில் திரு நீரஜ்சேகர் கேட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |