”இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள், கிரிப்டோ கரன்சி, ஆன்லைவர்த்தகம், ட்ரோன்கள் வாயிலான குற்றங்கள் நமக்கு பெரிய சவாலாக உள்ளன. அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
”போதைப் பொருட்கள் கடத்தலை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.
போதைப் பொருட்கள் கடத்தலும், தேசிய பாதுகாப்பும் என்பது தொடர்பான பிராந்திய அளவிலான கருத்தரங்கம் டில்லியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள், கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம், ஆன்லைன் வர்த்தகம், ட்ரோன்கள் வாயிலான குற்றங்கள் நமக்கு பெரும் சவால்களாக உள்ளன.
சிறப்பான பலன்கள்
இவற்றை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுபோல், மற்றொரு முக்கிய சவாலாக போதைப் பொருட்கள் கடத்தல் அமைந்துள்ளது.
போதைப் பொருட்கள் கடத்தலுடன் அது, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகவும் உள்ளது. இந்த பிரச்னையை ஒழிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம் என, பல மாநில அரசுகளுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்துள்ளன. இந்த போதைப் பொருள் கடத்தல் இணைப்புகளை துண்டிப்போம்.
இதன் வாயிலாக பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுத்து நிறுத்துவோம். ஒரு கிலோ போதைப் பொருட்கள் கூட, நம் நாட்டின் வழியாக கடத்த முடியாதவாறு தடுத்து நிறுத்துவோம்.
இது போன்ற பிரச்னைகளுக்கு, தொழில்நுட்ப உதவிகளுடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்.
ஏழு மடங்கு அதிகம்
கடந்த ஆண்டில் மட்டும், 16,914 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மாநில போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதே அரசின் முன்னுரிமை.
கடந்த 2004 – 2014 கால கட்டத்தில், 3.63 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில், 2014 – 2024 கால கட்டத்தில், 24 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது, ஏழு மடங்கு அதிகம்.
அதுபோல, 2004 – 2014 கால கட்டத்தில் 8,150 கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
இதுவே, 2014 – 2024ல், 54,851 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |