அம்பேத்கரை தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவரது மதிப்பை உணர்ந்து, அவரது சிந்தனைகளை நடைமுறைப் படுத்தி வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.பிரதமர் மோடியின் ஆட்சியில், தொழில்துறை, சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு, அம்பேத்கரின் சிந்தனைகள் எந்தளவுக்கு உதவியுள்ளது என்பதை, இந்நுால் ஆய்வு செய்கிறது.
மோடி ஆட்சியில், உலகத்தரமான கட்டமைப்புகள் உருவாக்கபட்டு வருகின்றன. ஏழைகளுக்கு வீடுகள், பெண்களின் திருமணவயது உயர்வு, இலவச காஸ் இணைப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள், முத்தலாக்சட்டம் என, மோடி கொண்டுவந்த சட்ட திட்டங்கள் வாயிலாக, பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைகண்டு, அம்பேத்கரே பெருமைப்படுவார்.
அம்பேத்கரும், மோடியும், ஏழ்மையையும், ஒடுக்குமுறைகளையும் அனுபவித்ததுடன், அதை ஒழிப்பதற்காக பாடுபட்டவர்கள். இருவரும், இந்தியா பற்றி பெரிதாக கனவுகண்டவர்கள். செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். பிரதமர் மோடி உருவாக்கும் தற்சார்பு இந்தியா, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
இசைஞானி இளையராஜா பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசியது
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |