சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் 11 வரை  10 நாள் நாடு தழுவிய கொண்டாட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற பதாகையின் கீழ் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10 நாள்  சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நாடு முழுவதும், சிறுமிகளின் உரிமைகள் பற்றிய விவாதங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துதல், அவர்களின் கல்வி மற்றும் அதிகாரமளித்தலை ஆதரிக்கும் முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில்  சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஈடுபடுத்தின. மரக்கன்றுகள் நடும் இயக்கங்கள், பள்ளி செல்லும் திறமையான சிறுமிகளை கௌரவித்தல், “மகள்களுடன் செல்ஃபி” இயக்கங்கள், கன்னி பூஜை விழாக்கள், சுகாதார முகாம்கள், கருத்தரங்குகள்,  விளையாட்டு நிகழ்வுகள், சிறுமிகளிடையே சுறுசுறுப்பான பங்கேற்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவித்தல் ஆகியவை செயல்பாடுகளில்  அடங்கும்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கருத்து தெரிவித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, “நமது பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு பொறுப்பு மட்டுமல்ல; இது பிரகாசமான எதிர்காலத்திற்கான நமது பார்வை. அவர்களின் உரிமைகள் மற்றும் திறனை அங்கீகரிப்பதன் மூலம், ஒவ்வொரு பெண்ணும் செழித்து வளரும் ஒரு சமத்துவ சமூகத்திற்கு வழி வகுக்க முடியும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...