கெஜ்ரிவால் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை வெளிப்படையாக கணக்கு காட்ட வேண்டும் – அமித்ஷா வலியுறுத்தல்

”டில்லியில் முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மக்களுக்கு செய்தது என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து, கணக்கு காட்டியே தீர வேண்டும்,” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக பதவி வகித்த போது, டில்லியின் சிவில் லைன் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்தார். அப்போது இந்த பங்களாவில், 45 கோடி ரூபாய் செலவு செய்து புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார். அது குறித்து பா.ஜ.,வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி, கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அவரை தொடர்ந்து அமித் ஷாவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டில்லியில் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
டில்லியில் உள்ள எனது வீட்டிற்கு சிறுவர்கள் சில பேர் வந்து என்னை சந்தித்தனர். அப்போது, நான் அவர்களிடம், டில்லிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்துள்ளார் என கேட்டேன்.

அதற்கு, அவர்களில் ஒரு சிறுவன், ஒரு பெரிய கண்ணாடி மாளிகை அவருக்கு உள்ளது என்றான். அவர் அரசியலுக்கு வரும்போது, தான் அரசின் பங்களாவோ அல்லது காரோ பயன்படுத்தவில்லை என்று கூறினார். தற்போது,டில்லிவாசிகளின் பணத்தில் பெரிய பங்களாவை உருவாக்கி உள்ளார். கெஜ்ரிவால், நீங்கள் டில்லி மக்களுக்கு கணக்கு காட்டியே தீர வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திமுக அரசின் தோல்விகளை மடை மாற் ...

திமுக அரசின் தோல்விகளை மடை மாற்றவே தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தை சச்சரவாக்க  திமுக  முயற்சி அரசின் தோல்விகளை மடைமாற்றவே தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை சச்சரவாக்க ...

தேசிய கீதம் அவமதிப்பு: L. முருகன் ...

தேசிய கீதம் அவமதிப்பு: L. முருகன் குற்றச்சாட்டு இன்று தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தேசிய ...

உடன் இருக்கும் அதிகாரியை தரக்க ...

உடன் இருக்கும் அதிகாரியை தரக்குறைவாக பேசுவது திராவிட மாடல் அரசு – ஹெட்ச்  ராஜா ''உடன் இருக்கும் அரசு அதிகாரியை தரக்குறைவாக பேசுவது, ஜாதியை ...

H.M.P வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: ...

H.M.P வைரஸ் பற்றி கவலை தேவையில்லை: ஜேபி நட்டா ''சீனாவில் ஏற்பட்டுள்ள எச்.எம்.பி.வி., நோய்த்தொற்று தொடர்பாக யாரும் கவலைப்பட ...

இந்திய ரயில்வேயில் வரலாற்று மா ...

இந்திய ரயில்வேயில் வரலாற்று மாற்றம் – பிரதமர் மோடி பெருமிதம் இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தைக் கண்டுள்ளது என ...

டெல்லியில் சட்டசபை தேர்தலில் ப ...

டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். பிரதமர் மோடி உறுதி 'டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, தாமரை ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...