3-மடங்கு வேகத்தில் பாரதத்தின் முன்னேற்றம் – திரௌபதி முற்றுமோ பெருமிதம்

இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டம் இன்று ( ஜன.31) காலையில் துவங்கியது. பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். முன்னதாக அவரை குதிரைப்படை வீரர்கள் புடைசூழ வரவேற்று வந்தனர். பார்லி.,க்கு வந்த ஜனாதிபதியை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ‘பாரதத்தின் பொருளாதாரம், டிஜிட்டல் துறை , விவசாயம், புதிய சீர்திருத்தம் என பல்வேறு துறைகளில் வளர்ச்சி மும்மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி என்ற நோக்கில் இந்திய அரசு செயல்படுகிறது’ என தெரிவித்தார்.

உரையின் துவக்கத்தில் மஹா கும்பமேளாவில் உயிரிழந்தோருக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார். மறைந்த பிரதமர் மன்மோகன்சிங் மறைவு பேரிழப்பு என ஜனாதிபதி புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து ஜனாதிபதி முர்மு உரையில் அவர் பேசியதாவது :

மத்திய அரசு விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளது. விவசாயிகளுக்கு இதுவரை நிதிக்காக ரூ.41 ஆயிரம் கோடி வழங்கி உள்ளோம். 70 வயதுக்கு மேற்பட்டோர் 6 கோடி பேர் ஆயுஷ்மான் திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் .கோடிக்கணக்கான மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளோம். இந்த ஆட்சியில் வக்பு வாரிய சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய சீர்திருத்த சட்டங்களை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத அளவிற்கு பாரதத்தின் வளர்ச்சி மும்மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்கள், பெண்களின் அதிகாரம், ஏழை மக்களின் வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சிறு வியாபாரிகளையும் அரவணைத்து வருகிறது. தொலைபேசி வாயிலாக ஆலோசனைகள் வழங்கியதன் மூலம் 30 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களிடம் பேசியதாவது : இந்த பட்ஜெட் கூட்டம் பயனுள்ளதாக அமையும், மத்திய அரசு வர்க்கத்தினருக்கு நன்மை பயக்கும். நல்ல படியாக அமைய அன்னை லட்சுமியை வணங்குகிறேன். ஏழைகளுக்கு செல்வங்கள் வழங்கிட வேண்டுகிறேன். அவரது ஆசி கிட்டும் என நம்புகிறேன். 2047 ல் நாடு வல்லரசாக மாறும் வகையில் பட்ஜெட் இருக்கும். மக்களின் மேம்பாட்டுக்காக நாள்தோறும் பாடுபட்டு வருகிறோம். அனைவருக்குமான திட்டங்கள், புதிய முன்னேற்றம், முதலீடு ஆகியவற்றை கொண்டதாக இந்த பட்ஜெட் அமையும். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வழிதிட்டங்களுடன் இந்த பட்ஜெட் இருக்கும். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பதை நோக்கமாக கொண்டு பயணிக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...