தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றுள்ள பிரதமர் மோடி வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி அமைப்பின் ஆறாவது மாநாடு, இன்று (ஏப்ரல் 04) நடைபெறுகிறது. ஏற்கனவே, இந்தியா – தாய்லாந்து இடையேயான உறவை, பல்துறை உறவாக உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி – தாய்லாந்து பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரே இடையே நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 04) தாய்லாந்தில் பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுாஸ் சந்தித்துப் பேசினார். மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங்யை பிரதமர் மோடி சந்தித்தார்.
இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங்யை சந்தித்தேன். சமீபத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு மீண்டும் ஒருமுறை இரங்கல் தெரிவித்தேன்.
இந்த நெருக்கடியான நேரத்தில் மியான்மரின் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ இந்தியா முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |