பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த ரேகா குப்தா

டில்லியின் முதல்வராக பொறுப்பேற்ற ரேகா குப்தா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ., டில்லியில் ஆட்சியைப் பிடித்தது. அண்மையில் நடந்த புதிய அரசு பதவியேற்பு விழாவில் ரேகா குப்தா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, டில்லியின் மகளாக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

பிரதமருடனான சந்திப்பு புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரேகா குப்தா, ‘மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில், இரட்டை இன்ஜின் அரசு, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சிக்கான பாதையில் பயணிக்கும். இதன்மூலம், வளர்ச்சியடைந்த டில்லி என்ற மக்களின் கனவை எட்ட முடியும்,’ இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, டில்லியில் தரமற்ற சாலைகளை சீரமைத்தல் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்களை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...