‘எனக்கு ஓட்டு போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி, ஜாதி அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டேன்’ என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் உள்ள மத்திய இந்தியா கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்து கொண்ட போது அவர் பேசியதாவது; ஜாதியை அடிப்படையாகக் கொண்ட அரசியலை கடுமையாக எதிர்க்கிறேன். ஒருவரின் தகுதியை அவரது திறமைகளை வைத்தே மதிப்பிட வேண்டும். ஜாதி, மதம், மொழி மற்றும் பாலினத்தை வைத்து மதிப்பிடக் கூடாது.
ஒருமுறை 50 ஆயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் பங்கேற்ற போது, ‘ஜாதியை பற்றி யாராவது பேசினால், அவர்களை கடுமையாக உதைப்பேன்’ என்று கூறினேன்.
நான் அரசியலில் இருக்கிறேன். எனக்கு ஓட்டு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், நான் ஜாதி அரசியலை ஏற்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |