வரும் 2036ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு போடோ சமூக இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.
வரும் 2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அசாம் மாநிலம் கோக்ரஜாரில் டோட்மாவின் போடோபா புதாரில் நடைபெற்ற அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் 57வது ஆண்டு மாநாட்டின் நான்காவது மற்றும் கடைசி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது:
சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த போடோ இளைஞர்கள் முன்கூட்டியே தயாராக வேண்டியது அவசியம்.
ஆகவே,2036 ஒலிம்பிக்ஸ்க்கு போடோ இளைஞர்கள் தயாராக வேண்டும். இது விளையாட்டு மற்றும் உடல் திறனின் முக்கியத்துவம் சார்ந்தது.
இந்த அறிவுறுத்தல், 2036 கோடைகால ஒலிம்பிக்ஸ் நிகழ்வை இந்தியா நடத்தும் என்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற தலைவர்களின் பரந்த நோக்கத்தோடு தொடர்புடையது.
மாநிலத்தில் உள்ள போடோலாந்து போன்ற பகுதிகளின் இளைஞர்கள் உலகளாவிய அளவில் இந்தியாவின் விளையாட்டு சாதனைகளுக்கு பங்களிக்கும் திறன் மகத்தானது.
முக்கியமாக அசாமில் வாழும் போடோ சமூக மக்கள் நாட்டின், கலாசார மரபுகள் மற்றும் விளையாட்டுகளில் அதிகரித்து வரும் ஆர்வத்தை கொண்டுள்ளனர்.
இந்தியா ஒரு உலகளாவிய விளையாட்டு மாபெரும் சக்தியாக மாறுவதை நோக்கமாக கொண்டு, விளையாட்டு உள்கட்டமைப்பு, திறமை வளர்ச்சி மற்றும் தேசிய பெருமையை ஊக்குவிப்பதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது.
இந்தியா 2036 ஒலிம்பிக்ஸை வெற்றிகரமாக நடத்தினால் அது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமையும்,
35 லட்சம் மக்கள் வசிக்கும் போடோலாந்து பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உறுதிமொழி உள்ளது.
இதன்படி, 82 சதவீத பிரிவுகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 100 சதவீத செயல்படுத்தலை அடைவதற்கான உறுதிமொழி எடுத்துள்ளோம். இதற்காக, ரூ.1,500 கோடி ஒதுக்கி உள்ளோம்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |