ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் சென்ற மோடி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. அங்கு இன்று குடி பத்வா விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதற்காக பிரதமர் காலை விமானம் மூலம் நாக்பூர் புறப்பட்டு சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிரா முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பிறகு பிரதமர் மோடி விமானநிலையத்தில் இருந்து நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ஆா்.எஸ்.எஸ். நிறுவன தலைவா்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் கலந்துகொண்டார். பின்னர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

அந்த புத்தகத்தில், ‘டாக்டர் ஹெட்கேவர், குருஜி ஆகியோருக்கு மனமார்ந்த வணக்கங்கள். உங்களின் நினைவுகளை போற்றி, இங்குவருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கலாச்சாரம், தேசிய வாதம் மற்றும் அமைப்பின் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடம், தேச சேவையில் முன்னேற நம்மை ஊக்குவிக்கிறது. இந்தஇடம், நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கும் லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு ஒருசக்தி மிகுந்த இடமாகும். நமது முயற்சிகள் மூலம் மகிமை எப்போதும் அதிகரிக்கட்டும்’ என்று பிரதமர் மோடி எழுதி கையெழுத்திட்டார்.

குருஜி கோல்வல்கா் நினைவாக ஆா்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு பன்னோக்கு கண்மருத்துவமனை நிறுவப்பட்டது. அது தற்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட உள்ள மாதவ் நேத்ராலயா சிகிச்சை மையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 14 வெளி நோயாளி பிரிவுகள், 14 அறுவைசிகிச்சை அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

அதன்பிறகு பிரதமர் மோடி அங்கிருந்து அம்பேத்கர் புத்தமதத்தை தழுவிய இடமான தீக்ஷா பூமிக்கு சென்றார். அதன்பிறகு பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். பிரதமர் ஆன பிறகு முதல் முறையாக மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைமையகதுக்கு சென்றுள்ளார். இதற்குமுன்பு கடந்த 2013-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர் குஜராத்முதல்வராக இருந்தார். மேலும் ஆா்.எஸ்.எஸ். தலைமையகக்கு செல்லும் முதல் இந்தியபிரதமரும் அவா் என்பதால் இந்த பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அங்கு அவர் ஆர்எஸ்எஸ். தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அங்கு ஆலோசனையை முடித்துவிட்டு புறப்பட்ட பிரதமர் மோடி ‘சோலாா் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்திஆலையை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்ட 1,250 மீட்டா் நீளம் மற்றும் 25 மீட்டா் அகலம்கொண்ட விமான ஓடுபாதை மற்றும் போா்முனை சோதனை வசதிகளையும் அவா் திறந்துவைத்தார்.

நாக்பூரில் சமீபத்தில் இரு பிரிவினரிடையே மோதல்வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாக்பூரில் சுற்றுபயணம் மேற்கொண்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாக்பூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார். 2024 பாராளுமன்ற தோ்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு முதன்முறையாக அவர் அங்கு அவா் செல்கிறாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...