கல்வி உள்ளிட்ட பலதுறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலுபிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசியதலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா சனிக்கிழமை விமா்சித்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ்குமாரின் ஆட்சியில், பிகாா் இருளில்இருந்து வெளிவந்து பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் வளா்ச்சியைக் கண்டுள்ளது.
பிகாா் ஒரு உத்வேகத்தைக் கொண்டுள்ளது. உலகுக்கு ஜனநாயகத்தை வழங்கிய இந்த மாநிலத்தின் நாளந்தா, விக்ரம்ஷிலா ஆகியவை கற்றலுக்கான சிறந்தஇடங்களாகவும் இருந்தன. நவீன காலங்களில்கூட, பிகாா் மாணவா்கள் தில்லி பல்கலைக்கழகக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் படித்தனா். மாநிலத்தைச்சோ்ந்த பல பேராசிரியா்கள் தங்கள் அறிவுத் திறமைக்காக உலக அளவில் அறியப்பட்டவா்கள்.
1970-ஆம் ஆண்டுகளில், பிகாா் ஒருமுன்னேறும் மாநிலமாக இருந்தது. 1990-களில் லாலு பிரசாத் முதல்வராக பதவியேற்றதும், அனைத்து துறைகளிலும் வீழும்மாநிலமாக பிகாா் மாறியது. அந்தக் காலகட்டத்தில் மாநிலத் தலைநகா் பாட்னாவில் மாலைபொழுதில் வெளியே செல்வதே கடினமாக இருந்தது.
மருத்துவா்கள் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்ஏற்பட்டது. திருமணங்களுக்காக விற்பனை நிலையங்களில் இருந்து புதியவாகனங்கள் வலுக்கட்டாயமாகத் திருடி செல்லப்பட்டன. பிகாரில் கட்டாட்சி என்றும் நடைபெற்றதில்லை என்று சிலா் கூறுகின்றனா் (லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவைக் குறிப்பிடுகிறாா்). ஏனெனில், அவா்கள் அப்போதுபிறக்கவில்லை.
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியால் அழிவின் விளம்பில்இருந்த தில்லியில் பாஜக ஆட்சியைக் கொண்டு வந்ததற்காக தில்லி பாஜகவுக்கும் பூா்வாஞ்சல் அணிக்கும் பாராட்டுகள். நிகழாண்டு இறுதியில்நடைபெறும் பிகாா் பேரவைத் தோ்தல் பிரசாரத்திலும் நீங்கள் பங்கேற்க வேண்டும்.
கடந்த 2005-ஆம் ஆண்டில் பிகாரில் 384 கிலோமீட்டா் கிராமப்புற சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 1.12 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமாக கிராமப்புற சாலைகள் விரிவடைந்துள்ளன.
ஐஐடி, எய்ம்ஸ், இந்திய மக்கள்தொடா்பு கல்விநிறுவனம் (ஐஐஎம்சி) மற்றும் இந்திய வெளிநாட்டு வா்த்தக கல்விநிறுவனம் (ஐஐஎஃப்டி) ஆகிய தேசிய கல்வி நிறுவனங்கள் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. பாட்னா மருத்துவக் கல்லூரி ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாக இருக்கப்போகிறது என்றாா்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |