இந்தியாவில் அணு உலைகள் தயாரிப்பு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா

இந்தியா – அமெரிக்கா இடையேயான சிவில் அணு ஒப்பந்தம் கையெழுத்தாகி, 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அணு உலைகளை இந்தியாவில் கூட்டாக வடிவமைத்து, தயாரிப்பதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சிவில் அணு ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே, 2007ல் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் இதில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க நிறுவனங்கள், அணு உலைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும். அதே நேரத்தில் இந்தியாவில் வடிவமைத்து, தயாரிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

கடந்த, 17 ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டங்களாக நடந்த பேச்சுகளைத் தொடர்ந்து, அணு உலைகளை இந்தியாவிலேயே கூட்டாக வடிவமைத்து, தயாரித்து, தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு, அமெரிக்க அரசின் அணுசக்தி துறை சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட நீண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்தத் துறையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கூட்டாக வடிவமைத்து, தயாரிப்பதற்கு அமெரிக்கா முன் வந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹோல்டெக் இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியான கிருஷ்ணா சிங், இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ஹோல்டெக் ஆசியா’ மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது. குஜராத்தின் பரூச் மாவட்டம் தஹேஜில் இதன் ஆலை உள்ளது. ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம், அணு உலைகள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களில் ஒன்று.

அமெரிக்க அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த நிறுவனம், தன் துணை நிறுவனமான ஹோல்டெக் ஆசியா, மற்றும் ‘லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்களுக்கு, தன் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள முடியும்.

அதாவது இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து கூட்டாக, இந்தியாவில் வடிவமைத்து, தயாரிக்க உள்ளன. இதைத் தவிர, அணு மின் நிலையம் அமைப்பதற்காக, மத்திய அரசின், என்.பி.சி.ஐ.எல்., எனப்படும் இந்திய அணுசக்தி வாரியம் லிமிடெட், என்.டி.பி.சி., எனப்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன், ஏ.இ.ஆர்.பி., எனப்படும் அணுசக்தி ஆய்வு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்தும் செயல்பட, ஹோல்டெக் இன்டர்நேஷனல் தயாராக உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...