தமிழ்நாட்டில் இருந்து தமக்கு தலைவர்கள் சிலர்எழுதும் கடிதங்களில் கையெழுத்துகூட தமிழில் இல்லாததை கண்டு வியப்படைந்துள்ளேன் என்று பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – பாம்பன் இடையே கடலில் கட்டப்பட்டுள்ள புதியநவீன பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். அதன் பின் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டும் விழாவில் அவர் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:
பாம்பன் பாலத்தை 100 ஆண்டுகளுக்கு முன் கட்டியவர் ஒருகுஜராத்தி. இதில் தற்செயலான ஓர் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 100 ஆண்டுகளுக்கு பின், ராம நவமி எனும் புனிதமான இந்தநன்னாளில் புதிய பாம்பன் பாலத்தையும் குஜராத்தில் பிறந்த நான் திறந்து வைத்துள்ளேன் என்பதுதான்.
தமிழ்நாட்டில் மட்டும் மத்திய அரசின் 1,400 மக்கள் மருந்தகங்கள் உள்ளன. இங்கு 25,30, 50 பைசாவுக்குகூட மருந்து, மாத்திரைகள கிடைக்கின்றன. இங்கு 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுவதால் பொதுமக்கள் 700 கோடிரூபாய் அளவுக்கு சேமிக்க முடிந்துள்ளது. எனவே இந்த மருந்தகங்களை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நம் நாட்டுமாணவர்கள் மருத்துவம் பயில வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசுசெயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஆண்டுகளில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதால், மருத்துவக் கல்விப் பாடத் திட்டங்களை தமிழ் மொழியில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்சமூகம் கடுமையாக உழைக்கும் வர்க்கமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மீன்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களுக்காக பல கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக் கணக்கான சிறு விவசாயிகளுக்கு 12 ஆயிரம்கோடி ரூபாய் மத்திய அரசின் நிதியுதவி வழங்கியுள்ளது. பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழக விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து சில தலைவர்கள் எனக்கு அவ்வப்போது கடிதம் எழுதுவதுண்டு. அந்த கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கும் என்பது கூட வியப்பில்லை. கடிதம் எழுதியவர்களின் கையெழுத்துக் கூட ஆங்கிலத்தில் தான் இருக்கும். குறைந்தபட்சம் கையெழுத்தையாவது இவர்கள் தமிழில் இடக் கூடாத என்று எண்ணி வியந்திருக்கிறேன்.
பாஜக தோன்றிவிக்கப்பட்ட சிறப்புமிக்க நாள் இன்று. நாட்டின் வளர்ச்சிஒன்றையே ஒற்றை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் பாஜகவின் வளர்ச்சிக்கு தொண்டரின் அளப்பரிய உழைப்பேகாரணம். அதனால் தான் நல்லாட்சி செய்யும் வாய்ப்பை நாட்டு மக்கள் நமக்கு அளித்துள்ளனர். அவர்கள் நமக்கு ஆட்சி உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் வளர்ச்சிக்கு அயராதுபாடுபடும் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு நன்றியும், வாழ்த்துகளையும் காணிக்கை ஆக்குகிறேன் என்று ஹிந்தியில் மோடி பேசினார்.
தமது உரையை அவர் முடிக்கும்போது நன்றி,, வணக்கம்… மீண்டும் சந்திப்போம்! என்று தமிழில் கூற, விழாவில் குவிந்திருந்த பாஜக தொண்டர்கள் மோடி.. மோடி.. பாரத் மாதாகி ஜே… என்று கரகோஷம் எழுப்பினர்.
மோடி சாமி தரிசனம்: முன்னதாக, புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பாக அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |