தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, தி.மு.க. கூட்டணி அரசைவிட தற்போதைய மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது, வளர்ச்சியைடந்த பாரதம் நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் வல்லமை வளர்ச்சியைப் பொருத்து, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும்.
2014 முன்னர்வரையில் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட, கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிக நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது, தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு அதிகளவில் உதவி புரிந்துள்ளது. தமிழ்நாட்டின் கட்டமைப்புதான், பாரத அரசின் முதன்மை. கடந்த 10 ஆண்டுகளிலே, தமிழ்நாட்டின் ரயில்வே துறை பட்ஜெட்டில் 7 மடங்குக்கும் அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் செய்தபின்னரும் சிலர் அழுதுகொண்டே இருக்கின்றனர். அவர்களால் அழ மட்டுமே முடியும்; அவர்கள் அழுதுவிட்டு போகட்டும். 2014 ஆண்டுக்கு முன்னர்வரையில், ஒவ்வோர் ஆண்டும் ரயில் துறை திட்டங்களுக்காக வெறும் ரூ. 900 கோடி மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் கூட்டணியில் யார் ஆட்சி அமைத்திருந்தார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை. இந்தாண்டு, தமிழ்நாட்டின் ரயில் பட்ஜெட் ரூ. 6,000 கோடிக்கும் அதிகம்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |