எந்த உத்தரவாதமும் இன்றி ரூ 33 லட்சம் கடன் – பிரதமர் மோடி பெருமிதம்

”எந்த உத்தரவாதமும் இல்லாமல் நாட்டு சாமானிய மக்களுக்கு ரூ.33 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சிறு, குறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் ‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் பயன் அடைந்தவர்களை டில்லியில் பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: எந்த உத்தரவாதமும் இல்லாமல் நாட்டு சாமானிய மக்களுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இன்று இந்திய இளைஞர்களிடம் தொழில்முனைவோர் திறன்கள் உள்ளன. அவர்களுக்கு ஒரு சிறிய உதவி கிடைத்தால், மிகப் பெரிய பலன்களை அடைகின்றனர். முத்ரா யோஜனா திட்டத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பெண்கள் கடன் பெற்றுள்ளனர். மேலும் அவற்றை விரைவாக திருப்பிச் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். நாட்டின் இளைஞர்கள் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

முத்ரா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன. பொதுவாக அரசாங்கத்தின் தன்மை என்ன? அவர்கள் ஒரு முடிவை எடுத்து, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, நாங்கள் இதைச் செய்வோம் என்று அறிவித்து, பின்னர் சிலரை அழைத்து விளக்கேற்றி திட்டத்தை தொடங்கி வைப்பார்கள் மக்களின் கருத்துகளை கேட்க மாட்டார்கள்.

இந்த அரசாங்கம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திட்டத்தின் முடிவுகளை மதிப்பிடுகிறது. பயனாளிகளிடம் அவர்களின் அனுபவத்தைப் பற்றி நாங்கள் கேட்கிறோம், அதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டிய அவசியம் இருந்தால், சில மாற்றங்களை கொண்டு வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம் பாகிஸ்தான் நேற்று இந்தியா மீது ஏவுகணைகளை வீசி தாக்க ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...