தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது முத்ரா கடன் திட்டம்

“சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற தாகத்தை தணிப்பதுடன், நம் இளைஞர்களின் தொழில் திறன்களை, முத்ரா திட்டம் வெளிப்படுத்தியுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

‘நிதியற்றவர்களுக்கு நிதியளிப்பது’ என்ற நோக்கத்துடன் குறு, சிறு நிறுவனங்களை முறையான நிதி அமைப்புகுள் கொண்டு வந்து அவர் களுக்கு மலிவான கடன்களை வழங்கும் முத்ரா திட்டம், 2015 ஏப்., 8ல் துவக்கி வைக்கப்பட்டது.

பொதுத்துறை, கூட்டுறவு, தனியார் என, அனைத்து வங்கிகள் வாயிலாக தொழில்களை நடத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும், 20 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.

இதன் 10வது ஆண்டை யொட்டி, திட்டத்தின் பயனாளிகள் சிலருடன், பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் உள்ள தன் இல்லத்தில் நேற்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது: முத்ரா திட்டத்தின் கீழ், இதுவரை 33 லட்சம் கோடி ரூபாய் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற கோடிக்கணக்கான இளைஞர்களின் தாகம் தணிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய தொழில்முனைவோர் திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.

வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை கொடுப்பவர்களாக திகழும் ஊக்கத்தை இளைஞர்களிடையே இந்த திட்டம் ஊட்டியுள்ளது.

இதுவரை கடன் பெற்றவர்களில் பாதி பேர், எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மேலும், 70 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அறியும்போது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஒவ்வொரு முத்ரா கடனும், சுயமரியாதை, கவுரவம், வாய்ப்பு களை கொண்டுள்ளது.

மேலும், சமூகப் பங்களிப்பு மற்றும் பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கிறது. இந்த கடன் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து, அதை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...