தலைசிறந்த தேசியவாதியான குமரி ஆனந்தன் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும் தமிழிசை அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர்.

பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.

தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் தமிழிசை அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொ� ...

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை: உ.பி.,யில் அமைகிறது உ.பி.,யில் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க பிரதமர் ...

ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனா� ...

ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ...

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்� ...

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் டில்லியில் பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. ...

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ� ...

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை ...

ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூ ...

ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் விளக்கிய இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கிடைத்த வெற்றி குறித்து, 70 ...

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரல� ...

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...