நம் கடற்படையின் தாக்குதல் திறன்களை வலுப்படுத்த, பிரான்சிடம் இருந்து 63,000 கோடி ரூபாய் மதிப்பில், 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த, ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து, மத்திய அரசு ஏற்கனவே நம் விமானப்படைக்காக, 30க்கும் மேற்பட்ட ரபேல் போர் விமானங்களை வாங்கி உள்ளது. இந்த விமானங்கள் நம் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நம் கடற்படையின் தாக்குதல் திறன்களை மேலும் வலுப்படுத்த, பிரான்சிடம் இருந்து, 63,000 கோடி ரூபாய் மதிப்பில், 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை வாங்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2023 ஜூலையில் இருந்தே இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு நம் நாட்டுக்கு வருகிறார். அப்போது, இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் உறுதியான பின், ஐந்து ஆண்டுகளுக்குள், 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை பிரான்ஸ் பகுதி பகுதியாக வினியோகம் செய்யும். 2031க்குள் அனைத்து விமானங்களும் வழங்கப்பட்டு விடும். அதன்பின், அவை நம் கடற்படையில் இணைக்கப்படும்.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில், 22 ஒற்றை இருக்கை மற்றும் நான்கு இரட்டை இருக்கை வகைகளை கொண்ட ரபேல் கடற்படை போர் விமானங்களை மத்திய அரசு வாங்குகிறது.
இந்த விமானங்கள், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான, ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பலில் நிலைநிறுத்தப்படும். மேலும், சூழ்நிலைக்கேற்ப விமானப்படையிலும் பயன்படுத்தப்படும்.
ரபேல் கடற்படை போர் விமானம் வலுவூட்டப்பட்ட தரையிறங்கும் கியர்கள், மடிப்பு இறக்கைகள் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும், உள்நாட்டு ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை இணைக்கவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.
விமானப் படைக்கு வாங்கப்பட்ட ரபேல் போர் விமானத்துக்கும், இதற்கும் தொழில்நுட்ப ரீதியில் பல வித்தியாசங்கள் உள்ளன.
விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து செல்லும் வகையில் ரபேல் கடற்படை போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது
தரையிறங்கும்போது அழுத்தங்களை தாங்கும் வகையில், வலுவூட்டப்பட்ட ஏர் ப்ரேம் மற்றும் அண்டர்கேரேஜ் உள்ளன
‘ஜம்ப் ஸ்ட்ரட்’ தொழில்நுட்பத்துடன் கூடிய வலுவான தரையிறங்கும் கியர்கள், மடிப்பு இறக்கைகள் இடம்பெற்றுள்ளன
ரபேல் விமானப்படை விமானத்தைவிட கடற்படை விமானத்தின் எடை, 500 கிலோ அதிகம். இதன் எடை, 10,600 கிலோ
இந்த விமானத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை போன்ற ஆயுதங்களை எடுத்துச்செல்ல முடியும். மேலும், கடல்சார் இலக்கு உட்பட கடற்படை போருக்கு ஏற்றபடி ரேடார், மின்னணு அமைப்புகளை கொண்டுள்ளது.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |