”இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாம் முன்வைத்த பரிந்துரை மீது, அதிபர் டிரம்ப் நிர்வாகம் உடனடியாக பதில் அளித்துள்ளது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் நாம் தீவிரம் காட்டி வருகிறோம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா பரஸ்பர வரி விதித்துள்ளது. இதில் சீனாவுக்கு மட்டும், 125 சதவீதம் வரி விதித்தது.
சீனா தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை, 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய பொருளாதார மந்த நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், உலகளாவிய வர்த்தக அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளது. இது பல்வேறு துறைகளிலும் குறிப்பாக தொழில்நுட்ப துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதில் நாம் முனைப்புடன் உள்ளோம். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரு மாதத்துக்குள் இருதரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என, கருத்தியல் ரீதியாக ஒப்புக் கொண்டுள்ளோம்.
இருதரப்புக்குமே அது பயன் அளிப்பதாக இருக்கும். ஒரு தரப்புக்கு சார்பாக இருக்காது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, முந்தைய டிரம்ப் ஆட்சியில் நான்கு ஆண்டுகள் பேச்சு நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
ஐரோப்பிய யூனியனுடன், 23 ஆண்டுகளாக பேச்சு நடத்தப்படுவதாக பலர் கூறுகின்றனர். அதில் உண்மையில்லை. யாரும் யாருடனும் பேசாமல் இருந்த காலகட்டம் ஒன்று இருந்தது.
இந்த முறை அப்படியில்லை. வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட அவசரமாக செயல்பட்டு வருகிறோம். நம் பிரதிநிதிகளும் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். எப்போதும் முடிவெடுப்பதில் நம் தரப்பில் தான் தாமதம் என குற்றஞ்சாட்டப்படும். இந்தமுறை அது தலைகீழாகி உள்ளது.
இருதரப்பு ஒப்பந்தம் குறித்து நாம் முன்வைத்துள்ள பரிந்துரைக்கு டிரம்ப் நிர்வாகம் உடனுக்குடன் பதில் அளித்துள்ளது. விரைவில் தீர்வு எட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |