எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பிரதம நரேந்திர மோடி தலைமையிலான அரசு வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாகவும் அமல்படுத்தியுள்ளது.
வக்பு வாரியத்துக்கு உட்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படை தன்மையை கொண்டு வர வேண்டும் என கூறி மத்திய அரசு வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மூன்றாம் தேதி மத்திய அரசு மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இதனை தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஏப்ரல் நான்காம் தேதி இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்ததாக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. வெற்றிகரமாக வக்பு வாரிய சட்ட திருத்தத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசு அடுத்த கட்டமாக பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதில் தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீண்ட காலமாகவே நாட்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பேசும்போது பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை என குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை பொருத்தவரை எந்த ஒரு எதிர்ப்பு இருந்தாலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. இந்தியாவில் தற்போதைக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த சட்டம் அங்கே நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் திருமணம் ,விவாகரத்து, குழந்தைகளை தத்து எடுப்பது, வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் பல்வேறு மதம் சார்ந்த அமைப்புகள் பொது சிவில் சட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி மதவாத சிவில் சட்டங்களோடு நாம் 75 ஆண்டு காலம் பயணம் செய்திருக்கிறோம் இந்த சட்டங்கள் நாட்டை மதரீதியாக பிளவுபடுத்துகின்றன. மேலும் மக்களிடம் அவை பாகுபாட்டை ஊக்குவிக்கின்றன என தெரிவித்தார். மதவாத சிவில் சட்டத்திலிருந்து மதசார்பற்ற சிவில் சட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும் , மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை ,அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவை நனவாக்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |