இந்திய நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் “இந்திய நதிகளின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய ;
இந்தியாவில் இருக்கும் நதிகளின் நிலைமை மிகவும் மோசகமாக உள்ளது, முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால் இந்தியாவில் உள்ள நதிகளின் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது. நதிகளை முறையாக பாதுகாக்காமல் விடுவதால் , வெள்ள பெருக்கு போன்ற பேரிடர்கள் ஏற்பட காரணமாகிறது. மக்களின் குடிநீர் ஆதாரமான நதிநீர் இப்போது பல-இடங்களில் நச்சுநீராக மாறி வருகிறது.
குறுகிய கால நலனுக்காக மற்றும் ஒரு சிலரினுடைய பேராசைக்காக நதிகளை நாசமாக விடக்கூடாது. நதிகளில் மணல் அள்ளுவதை கட்டுப்பாட்டுத்த வேண்டும்.எனவே நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான கொள்கைகள் தேவை. நதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே உணர்த்த வேண்டும்.
நதிகளை பாதுகாக்க ஜார்க்கண்ட் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.