எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதல்வருக்கு திராணி இருக்கிறதா? என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும்.
தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை விட, முதல்வருக்கும், அவரது மகனுக்கும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்யும் நடனத்தை ரசிப்பதற்குத்தான் நேரமிருக்கிறது என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு.
மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதல்வருக்கு சந்தேகம் தேவையில்லை. ஏனென்றால், அது பிரதமர் மோடியின் வாக்குறுதி.
ஆனால், முதல்வருக்கு, தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? இதே மதுரையில், வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதாக சொல்லி, ஆண்டுகள் நான்கு ஆகின்றன. ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. முதல் செங்கலை நாங்கள் தருகிறோம்.
எப்போது மதுரை வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பீர்கள் என்று கூற முதல்வருக்கு திராணி இருக்கிறதா? இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |