விண்வெளி வீரர் சுக்லாவை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் கண்டனம்

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை கவுரவிக்கும் வகையில், பார்லி.,யில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. அதை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கோபமடைந்த ராணுவ அ மைச்சர் ராஜ்நாத் சிங், ‘எதிர்க்கட்சிகளின் நடத்தை மிகவும் ஏமாற்றமளிக் கிறது’ என குறிப்பிட்டார்.

அமெரிக்காவின், ‘ஆக்சியம் 4’ திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர், ஜூன் 25ல், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.

இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். 18 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்த அவர்கள், ஜூலை 15ல் பூமிக்கு திரும்பினர். இந்த பயணத்துக்கு பின், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சமீபத்தில் தாயகம் திரும்பினார்.

இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விவாதம் நடந்தது. அப்போது, தேர்தல் கமிஷனை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தன.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், ”அரசின் மீது எதிர்க்கட்சிகளுக்கு கோபம் இருக்கலாம். ஆனால் நம்மை எல்லாம் பெருமைப்படுத்திய வீரரை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது, மிகவும் வருத்தம் அளிக்கிறது,” என்றார்.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை பாராட்டி பேசினர். பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

நம் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் குறித்து, லோக்சபாவில் சிறப்பு விவாதம் நடந்த போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது, மிகவும் துரதிருஷ்டவசமானது.

முக்கியத்துவம் வாய்ந்த விவாதத்தை தடுக்க எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. விண்வெளி போன்ற முக்கியமான விவகாரங்களில், அரசியலை புகுத்தக் கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.