மகாபாரத நாயகன் துரியோதனனுக்கும் ஒரு கோவில்

மகாபாரத நாயகன் துரியோதனுனுக்கு ஒரு கோவிலா? நம்ப முடிகின்றதா? முடியவிலைலை எனில் கொல்லத்தில் உள்ள மல நாடு என்ற ஊருக்குச் செல்லுங்கள். சாஸ்தம் கோட்டரா என்ற இடத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆலம் கடவு என்ற ஊரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது மலநாடு. அங்கு தான் துரியோதனன் மற்றும், துரோணர், கர்ணண், சகுனி, மற்றும் பீஷ்மரும் பூஜிக்கப்படுகின்றனர் .தெய்வச் சிலையே இல்லாமல் இருக்கும் அந்த ஆலயத்தில்

இவர்கள் அனைவரும் தெய்வமாக போற்றி வணங்கப்பட்டாலும் அந்த ஆலயம் துரியோதனன் ஆலயம் என்ற பெயரே பெற்றுள்ளதின் காரணம் துரியோதனன் தான் அந்த ஆலயத்தின் மூலதெய்வம் அவருக்கும் பக்தர்கள் இருக்கின்றனர்.

அந்த ஆலயத்தின் பெயர் மலையப்பூப்பன்னன் ஆலயம். அந்த கிராமத்தில் வசிக்கும் பலருக்கும் அவர்கள் பெயரில் துரியோதனன் என்ற அடைமொழிப் பெயர் உள்ளது. உள்ளுரைச் சேர்ந்த ஊராளியான குருவர் என்ற இனத்தவரே அந்த ஆலயத்தின் பிரதான பூஜாரியாக உள்ளார் .அந்த ஆலயத்தை நிர்வாகிப்பது நாயர், குருவர் மற்றும் இசவா என்ற இனப்பிரிவை சேர்ந்த மக்கள் தான். மகாபாரதம் நடந்த காலத்தில் வனப் பிரதேசமாக இருந்த அந்த இடத்தில் பாண்டவர்களைத் தேடி வந்த துரியோதனன் களப்படைந்தான். அப்பொழுது அவன் யார் என்பது சரிவரத் தெரியாததினால் அவனுக்கு தண்ணீரும் உணவும் தந்து உபசரித்தது குருவர் வம்சத்தைச் சேர்ந்த மக்களாம்.

துரியோதனனுக்கு கள் மற்றும் சாராயம் போன்றவை மிகவும் பிடிக்கும் என்பதினால் பண்டிகை தினத்தில் குடுவையில் கள் மற்றும் சாராயம் ஏந்தி வந்து அதை பிரசாதமாக அளித்தனர்.கள் மற்றும் சாரயத்தை பிரசாதமாக படைத்தப் பின் மீதி உள்ளதை அவர்கள் பிரசாதமாக பருகி விடுவார்களாம்.இப்படி ஒரு பழக்கம் உஜ்ஜயினியில் உள்ள கால பைரவர் என்ற ஆலயத்திலும் உள்ளது. ஆகவே இந்த பழக்கத்தைப் புதியது எனக் கூற முடியாது. கள் மற்றும் சாரயத்தை கொண்டு வர இயலாதவர்கள் கோழி, சிவப்பு பட்டுத் துணி அல்லது வெற்றிலை பாக்கைக் கொண்டு வந்து பூஜித்தனராம். முன்பு அந்த ஆலயத்தில் பலி கொடுக்கும் பழக்கமும் இருந்தது. ஆனால் நாளடைவில் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததினால் அந்தப் பழக்கம் நின்று விட்டது.

இவற்றைத் தவிற உள்ளுரில் விளையும் தானியம் மற்றும் பிற உணவு வகைகளும் பிரசாதமாகப் படைக்கப் படுகின்றன. மலயாளத்தில் மீன மாதத்தில்-மார்ச் மற்றும் ஏப்ரல் மாத இடையே வரும் இரண்டாவது வெள்ளிக் கிழமையில் அந்த ஆலயத்தில் நடக்கும் மலக் குடா விழாவில் ஆயிரக் கணக்கானவர்கள் வந்து பங்கேற்று வணங்குகின்றனர்.முதலில் திராவிடர்களுடைய கலாசாரத்தில் இருந்து வந்த இந்த சிலையற்ற ஆலயத்தில் நாளடைவில் பஸ்மம், அப்பம் போன்ற பிரசாதங்களும் தரப்படத் துவங்கியதற்கு எதிர்ப்பு வந்துள்ளது

மகாபாரத நாயகன் துரியோதனனுக்கும் ஒரு கோவில் , துரியோதனன் ஆலயம்

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...