மாநில அரசுஒத்துழைத்தால் நெடுஞ்சாலையில் பெட்ரோலியக் குழாய் பதிப்பு உறுதி என்று பாஜக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக விவசாயி அணியின் மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக விவசாயிகள் பரிதாபத்துக்குரியவர்கள். தாங்கள் கட்டி காக்கும் ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலமும் உயர்மின் கோபுரங்கள், பெட்ரோலியக்குழாய் பதிப்பு, எரிவாயுக்குழாய் பதிப்பு மற்றும் ரயில்வேக்கு இடமெடுப்பு என நிலத்தை துண்டாடிவிடுகிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.
இன்றைய விவசாயத்தில் கோவணம் கூட மிஞ்சாத விவசாயிக்கு கடைசியில் தன்னை காப்பாற்றுவது தன் நிலத்தின் மதிப்பு மட்டுமே. அதிலும் குழாய் பதித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கி விடுகிறது மாநில அரசு. கேரளாவிலும், கர்நாடகாவிலும் சாலையோரத்தில் பதிக்கப்படும் எரிவாயுக்குழாய் தமிழகத்தில் மட்டும் விளைநிலத்தில் பதிக்கப்படுவது ஏன்?
விவசாயிகள் மீது அக்கறையற்ற தமிழக அரசே இதற்கு காரணம்.கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் விளைநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எச்செயலையும் எனது அரசு செய்யாது என்று உறுதியளித்த தமிழக முதல்வர் இப்போது சூலூர், பல்லடம் விவசாயிகள் பாதிக்கப்படும்போது மௌனம் காப்பது ஏன்?
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்த போதும், பாரத் பெட்ரோலிய அதிகாரிகளை சந்தித்தபோதும் அவர்கள் சொல்லுவதெல்லாம் மாநில அரசு காட்டிய வழியில் நாங்கள் செல்லுகிறோம் என்பதே. எனவே டெல்லியில் மத்திய பெட்ரோலிய த்துறை அமைச்சர் உடனான சந்திப்பு விவசாயிகளுக்கு தங்கள் நிலம் காக்கப்படும் என்ற நம்பிக்கை ஊட்டியிருக்கிறது.அந்த நம்பிக்கையை தமிழக அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |