இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவோம்; அமித்ஷா திட்டவட்டம்

து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பாஜ அரசு ஓயாது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சபதம் விடுத்துள்ளார்.

சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் சத்தீஸ்கர் மாநில போலீசாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார். இது குறித்து அமித்ஷா கூறியதாவது: அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பாஜ அரசு ஓயாது.

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது.

ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் காட்டிய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும்.

ஒவ்வொரு மலை பகுதிகளிலும் நக்சலைட்டுகள் ஐஇடி வகை குண்டுகளை மறைத்து வைத்திருந்த போதும், பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.

கரேகுட்டா மலையில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை பாதுாப்பு படையினர் துல்லியமாக அழித்தனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நக்சலைட்டுகள் சீர்குலைத்தனர். அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தனர்.

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பலத்த காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதி செய்யவும் பாஜ அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.

2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் மற்றும் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...