இந்தியா டூ பூடான் ரயில் சேவை: ரூ.4,033 கோடியில் பாதை அமைக்க திட்டம்

இந்தியா-பூடான் நாடுகளுக்கு இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இணைந்து அறிவித்தார்.

இந்தியா – பூடான் இடையே தற்போது ரயில் இணைப்பு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே ரயில் சேவை ஏற்படுத்தும் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூடானில் இருந்து இந்தியாவின் இரு நகரங்களுக்கு ரயில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

அசாமின் கோக்ராசார் -பூடான் நாட்டின் கெலபு ஆகிய நகரங்களுக்கும், மேற்கு வங்கத்தின் பனாரத் – பூடான் நாட்டின் சம்சே நகரங்களுக்கும் ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 89 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதை 4,033 கோடி ரூபாயில் அமைய உள்ளது.

இது குறித்து நிருபர்களிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: நமது இரு நாடுகளுக்கும் இடையே ரயில் இணைப்பை ஏற்படுத்துவதில், மிகப்பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா, பூடான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு கலாசாரம், வளர்ச்சி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டது.

பிரதமர் நரேந்திர மோடி 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பூடானுக்கு விஜயம் செய்தபோது, ​​அவருக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான ‘ஆர்டர் ஆப் தி ட்ருக் யால்போ’ வழங்கப்பட்டது.

பூடான் அமைச்சர்களும், பிரதமரும் தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்தியா பூடானுக்கு அதிகமான உதவிகளை வழங்கி வரும் முக்கிய நாடாக இருந்து வருகிறது. நவீனமயமாக்கலில், குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இந்தியா-பூடான் ரயில்வே திட்டம், பூடானில் உள்ள கெலபு மற்றும் சம்சே ஆகிய இரண்டு முக்கிய நகரங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோக்ராசார் ரயில் பாதை திட்டம் 4 ஆண்டுகளிலும், பனாரத் ரயில் பாதை 3 ஆண்டுகளிலும் அமைக்கப்படும்.

இந்த இணைப்பின் மூலம் இந்தியாவின் ஒன்றரை லட்சம் கிலோமீட்டர் ரயில் பாதையுடன் பூடான் இணைக்கப்படும். பூடான் பொருளாதார வளர்ச்சி அடையவும், அந்நாட்டு மக்கள் உடனான உறவை வலுப்படுத்தவும் ரயில் சேவை முக்கியமானதாகும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...