பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்துவிட்டனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
பீஹார் மாநிலம், முசாபர்பூரில் நடந்ததேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சாத் பண்டிகை என்பது நாடகம் என்று காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் கூறியுள்ளனர். பீஹார்மக்கள் இந்த அவமானத்தை பல ஆண்டுகளாக மறக்கமாட்டார்கள். பீஹார் தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை அவமரியாதை செய்து விட்டார்கள். சாத்பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம்.
ஊழல், கொடுமை, தவறான ஆட்சி உள்ளிட்டவைதான் பீஹாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் ஐந்து அடையாளங்கள். ஆர்ஜேடி-காங்கிரஸ் உறவு தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்றது. அம்பேத்கரை காங்கிரஸ்-ஆர்ஜேடி தலைவர்கள் அவமதித்தனர். பீஹாரைக் கொள்ளையடிக்க, எந்தவிலை கொடுத்தாவது அதிகாரத்தை கைப்பற்ற ஆர்ஜேடி-காங்கிரஸ் ஒன்றிணைந்தது. பீஹாரில் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் போது ஆர்ஜேடி கட்சியினர் கொள்ளையடித்தனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் ஏராளமான குற்றச்சம்பவங்கள் நடந்தது.
பீஹாரின் கலாசாரத்தை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரப்புவது, மாநிலவளர்ச்சியை உறுதிசெய்வதற்கு தேஜ கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது. ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினரால் ஒரு போதும் பீஹாரை வளர்ச்சியடையச் செய்யமுடியாது. அவர்களது ஆட்சியில் ஊழல் செழித்துவளர்ந்தது. ஏழைகளின் உரிமைகள் சூறையாடப்பட்டன. அதேநேரத்தில் ஒரு சிலகுடும்பங்கள் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவர்களால் பீஹார் மக்களுக்கு நல்லது செய்யமுடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |