இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது

போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி பெற்ற மோடியின் அரசியல்; தேர்தலில் இந்திய ஆதரவு தாரிக் ரஹ்மான் அபார வெற்றி..! வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், 59.44 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது. மொத்தமுள்ள 299 இடங்களில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) தலைமையிலான கூட்டணி 212 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

ஜமாத் இ இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 70 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎன்பி 181 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான்ஆதரவு கட்சியான ஜமாத் இ இஸ்லாமி 61 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
இதில் நமக்கு சந்தோசமான விசயம் என்னவென்றால் இந்தியா ஷேக் ஹசினா ஆதரவு அரசியலை இப்பொழுது
வங்காள தேசத்தில் இப்பொழுது செய்ய வில்லை. மாறாக ஷேக்ஹசினாவின்அவாமி லீக் கட்சிக்கு எதிராக இருக்கும்
பிஎன்பி கட்சியுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியது.இதனால் வங்காள தேச இந்துக்கள் அனைவரும் தாரிக் ரஹ்மானின் தலை
மையிலான பிஎன்பி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள். இதனால் தான் பிஎன்பி கட்சி மிகப்பெரிய
அளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது.

வங்காள தேசத்தில் இந்திய எதிர்ப்புகளை தூண்டி விட்ட ஜமாத் இ இஸ்லா மி என்கிற முஸ்லிம் மத குருக்களின் கட்சியும் கடந்த வருடம் ஷேக் ஹசினாவை நாட்டை விட்டு துரத்திய மாணவர்களின் கட்சியான என்சிபியும் மிகப்பெரும் தோல்வியை தழுவியுள்ளது. ஜமாத் இ இஸ்லாமி மற்றும் என்சிபியி ன் பல முக்கிய தலைவர்கள் மண்ணை கவ்வி விட்டார்கள் இது வரை இந்திய எதிர்ப்பு நிலையில் இருந்து பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜ மாத் இஸ்லாமியுடன் கை கோர்த்து இ
ருந்த பிஎன்பி இப்பொழுது முதல் முறையாக ஜமாத் இ இஸ்லாமியுடன் கூட்டணி இல்லாமல் இந்தியா ஆதரவுடன்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று இருக்கிறது வங்காள தேச தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சிக்கு இப்பொழுது கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஷேக் ஹசினாவின் கட்சியான அவாமி லீக்கின் வாக்குகளும் இந்துக்களின் வாக்குகளும் தான். அதனால் இனி தாரிக் ரஹ்மான் பிரதமரான பிறகு வங்காள தேசத்தில் இந்திய எதிர்ப்பு குறைந்து இந்துக்களின் உரி
மைகள் பாதுகாக்கப்படும். மீண்டும் இந்தியா வங்காள தேசம் இடையே நெருங்கிய உறவு ஏற்படும். ஷேக் ஹசினா இன்னும் சில மாதங்களில் வங்காள தேசம் செல்வதற்கான சூழ்நிலை உருவாகும்.

வங்காள தேசத்தில் மோடியின் அரசிய ல் அபாரமானது. கலிதா ஜியாவின் மரணத்திற்கு பிறகு அதை முன் வைத்
து பிஎன்பிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வங்காள தேச அரசியலை மீண்டும் இந்தியாவின் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டார். இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அ டிமையாக இருந்த இப்போதைய இடைக்கால ஆட்சியாளர் முகம்மது யூனிஸை வங்காள தேச மக்கள் விரட்டி அடிக்கும் நிலை விரைவில் உருவாகும். மோடியை எதிர்த்து எந்த ஒரு நாட்டு தலைவரும் அவர்களுடைய நாட்டில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது..

தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியை நோக்கி மக்களை அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி, வங்கதேச மக்கள் உங்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

ஜனநாயக, முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய வாங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு வங்கதேச தேசிய கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் 2026 தேர்தலுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் நஸ்ரூல் இஸ்லாம் கான், ‘‘எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மானை வாழ்த்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

ஒரு ஜனநாயக நாடு, மக்களின் தீர்ப்பை அங்கீகரித்திருப்பது மிகவும் நல்லது. நரேந்திர மோடி இதைச் செய்துள்ளார். அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையில் இரு நாடுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவு பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
மக்களே! பிரதமர் மோடியின் அரசியல் நகர்வால், தற்போது வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...