உலகின் மிகவும் வெளிப்படையான வாகன சேவையாக பாரத் டாக்ஸி திகழும்; மத்திய அமைச்சர் அமித்ஷா

புதுதில்லியில் பாரத் டாக்ஸி உரிமையாளர்களுடன் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா உரையாடினார்.

அப்போது பேசிய அவர், தொழிலாளர்களாக இருப்போர் லாபம் பெறுவோராக இருக்க வேண்டும் என்று கூறினார். டாக்ஸி உரிமையாளரை வளமை மிக்கவராகவும், ஓட்டுனரை நிஜ உரிமையாளராகவும் ஆக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். ஓட்டுனர்கள் பாரத் டாக்ஸி உரிமையாளர்கள் என்றும் அவர்கள் லாபத்தில் பங்கு பெறுவார்கள் என்றும் கூறினார். வரும் 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநகராட்சியிலும் பாரத் டாக்ஸி செயல்படும் என்று தெரிவித்தார்.

நாட்டின் 5 மிகப்பெரிய கூட்டுறவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பாரத் டாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார். ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கூட்டாளராக விரும்பும் எந்தவொரு ஓட்டுநரும் ரூபாய் 500 மதிப்புள்ள பங்குகளை வாங்குவதன் மூலம் உரிமையாளர் உரிமையை பெறுவார் என்று தெரிவித்தார்.

பாரத் டாக்ஸியின் இயக்குனர்கள் நிர்வாக கூட்டம் நடைபெறும்போது சில பொறுப்புகள் ஓட்டுநர்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறினார். ஒருமுறை இயக்குநர்களின் நிர்வாகத்தில் ஓட்டுநர்கள் இடம்பெற்றுவிட்டால் அவர்கள் மற்ற ஓட்டுநர்களின் நலன் காப்பவர்களாகவும், பாதுகாவலர்களாகவும் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

பாரத் டாக்ஸியின் நோக்கம் தனியார் நிறுவனம் போன்று பெரிய லாபம் ஈட்டுவதல்ல என்றும், நமது ஓட்டுநர் சகோதரர்களை வலிமைப்படுத்துவது என்றும் திரு அமித் ஷா கூறினார்.

தகவலின் ஒவ்வொரு அம்சத்தையும் ஓட்டுநர்களுக்கு அளிப்பதன் மூலம், உலகில் மிகவும் வெளிப்படையான வாகன சேவையாக பாரத் டாக்ஸி திகழும் என்று திரு அமித் ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...