“ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும்” – மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல்

மதுரை மண்டேலா நகர் பகுதியில் நாளை பாரத பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறும் திடலில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், எஸ்பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பிரதமர் மோடி நாளை மதுரை வருகிறார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு பாரபட்சமாக நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம்.

திமுக அரசு தமிழக மக்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் இறையாண்மையும் கெடுத்துவிட்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும். புதிய அரசாங்கம், புதிய மக்கள் நலத்திட்டங்கள் NDA ஆட்சியில் நிச்சயம் வழங்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தில் தலைமை தாங்குகிறார்.

பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு நண்பர்கள் மற்றும் பழக்க வழக்கங்களை வைத்து கொள்வார்கள். அதேபோல் அவரும் வைத்துள்ளார். அதிமுக, பாஜக தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், இது ஒரு குடும்ப விஷயம். எங்களுக்குள் நடைபெறும் விஷயங்களை வெளியில் பேச முடியாது. இறுதி செய்த பின்பு கண்டிப்பாக சொல்வோம். ஈரான் போர் குறித்த கேள்விக்கு “இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் தான் பதில் சொல்ல முடியும். என்னால் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...