பங்குனி மாதம் தேய்பிறையில் வருவது விஜயா ஏகாதசி. இந்த நாளில், வாழை இலையில் 7 விதமான தானியங்களை (எள் சேர்க்காமல் ), ஒன்றின்மேல் ஒன்றாக பரப்பவேண்டும். அதன் மீது ஒரு கலசம்வைத்து, அதில் நாராயணரின் திருவடிவை_வரைந்து, முறையாக வழிபடவேண்டும். மறு நாள் துவாதசியன்று, ஒரு சாது
(அ) ஏழைக்கு உணவு அளித்து, பூஜைசெய்த கலசத்தையும் தானியங்களையும் அவருக்கு தரவேண்டும். அதன் பிறகே நாம் உணவை உண்ண வேண்டும். இந்தவிரதத்தை கடைப்பிடிப்பதால் தடைகள் நீங்கி, காரியஜெயம் உண்டாகும்.
பங்குனி வளர்பிறையில் வருவது ஆமலகீ ஏகாதசி. இந்த நாளில் உபவாசம் இருந்து நெல்லி மரத்தின் அடியில் தூய்மை செய்து, அங்கு பரசுராமனின் திருவடிவம் வரையப் பட்ட கலசத்தைப் பிரதிஷ்டை செய்து, முறைப்படி வழிபட வேண்டும். அதன் பிறகு நெல்லி மரத்தை வலம் வந்து வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டவர்களுக்கு, ஆயிரம் பசுமாடுகளை தானம் செய்த புண்ணியம் கிடைக்குமாம்!
நன்றி ; வைகுண்டன் திருச்சி
You must be logged in to post a comment.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
3reporters