விஷ்ணு பெற்ற சாபம்

 விஷ்ணு பெற்ற சாபம் முன்பு ஒரு முறை சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமான் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து வந்தவன். அன்று முழுவதும் ஹரியைக்குறித்த பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு பொழுதைக்கழித்தப் பின் அடுத்த நாளான துவாதசி அன்று விரதத்தை முடித்துக் கொள்வான். அந்த கடுமையான விரத முறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொண்டது இல்லை.

அப்படி இருக்கையில் ஒரு முறை துவாதசி தினத்தன்று அம்பாரிஷின் அரண்மனைக்கு முனிவர்களில் மாமுனியான துர்வாசர் வந்து இருந்தார்.அவர் சற்று முன்கோபக்காரர். அன்று மன்னன் ஏகாதசி விரதத்தில் இருந்தான். மாமுனிவரை கண்டவன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அர்க்கிய பாத்யம் கொடுத்ததுடன் (கைகால்களை அலம்பிக் கொள்ள தண்ணீர் தருவது ) மாமுனிவரிடம் தான் ஏகாதசி விரதத்தை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன் முடிக்க வேண்டி இருப்பதால் விரைவாக காலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வந்து விடுமாறு அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக்கொண்டான் . அவன் வேண்டுகோளை ஏற்ற மாமுனிவரும் நதிக்கரைக்குசென்று தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வரத் துவங்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நேரம் ஆகிவிட்டது. துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை மறந்து விட்டார். குறிப்பிட்டநேரத்திற்குள் முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.

தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி கால நேரம் முடிவதற்கு முன்னரே தவறாமல் தன் விரதத்தை முடித்துக்கொண்டு வந்திருந்தான் .சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை. வந்த விருந்தாளி சாப்பிடுவதற்கு முன்தான் சாப்பிடுவது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி காலநேரம் கடக்கும் முன் முடிக்க வேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வரும் முன்னர் சாப்பிடக் கூடாது. என்ன செய்வது என புரியாமல் குழம்பி நின்றவன் யோசனை செய்தான். என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு அருந்தியதற்கு சமானம் அல்ல என்பதினால் சிறிது தணிணீர் மட்டும் பருகிவிட்டு விரதத்தை முடித்துக் கொண்டான். வேறு வழி இல்லை, தணிணீர் கூட அருந்தாமல் இருந்தால் விரதம் முடிந்து போனதாக கருத முடியாது என்பதினால் அதை செய்த பின் முனிவர் வரும் வரை காத்திருந்தான்.

தனது காலைக் கடமைகளை முடித்துக் கொண்ட துர்வாச முனிவர் வந்தார். அரண்மனைக்கு வந்தவர் மன்னன் விரதத்தைமுடித்துக் கொண்டு விட்டதைப் பார்த்தார். தன்னுடைய முக்காலமும் உணரும் சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத்தையும் அறிந்து கொண்டார். துவாதசி காலநேரம் முடியும் முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக் கொண்டதோ உணவு அருந்தியதற்கு இணை ஆகாது என்ற சாஸ்திரம் அவருக்கும் நன்கே தெரியும். ஆனாலும் முன் கோபம் அவரை மீறிக் கொண்டது. மன்னனை ‘நான் வரும் முன்னரே உணவை அருந்தி பாபம்செய்து விட்டாய்’ எனக் கோபித்துக்கொண்டு சாபம் கொடுக்கத் தயார் ஆனார் ;. மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவைத் நாராயணன் மூலமே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தான். ஆகவே மாமுனிவர் சாபம் தரத் துவங்கும் முன்னரே நாராயணனைத் துதித்து தியானம் செய்யத் துவங்கினார். அவர் தியானம் செய்யத் துவங்கியதுமே நாராயணன் அவர்களுக்கு இடையில் வந்து நின்று கொண்டு விட்டார். துர்வாச முனிவர் சாபம் தரும் முன் தன்னை காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக்கொண்டு அம்பாரிச மன்னன் கெஞ்சினான். அதனால் துர்வாச முனிவர் நோக்கி ஸ்ரீமான் நாராயணண் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிச மன்னன் என்னுடைய உண்மையான பக்தன். நீ எந்த சாபத்தைக் கொடுத்தாலும் அது அவனிடம் பொய் சேராது , என்னையே அது வந்து அடையும். ஏன் எனில் என்னிடம் தஞ்சம் அடைந்து விட்டவர்களைக் காப்பதுவது என் கடமை. நிங்கள் என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்’

அதைக் கேட்ட துர்வாச முனிவருக்குத் தெரிந்தது உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கின்றது. பூமியில் உள்ள மக்களின் நன்மையைக் கருதித்தான் கடவுள் பூமியில் அவதரிப்பார் என்பது தெரிந்திருந்ததாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டதினாலும் தன்னைப் பொன்ற மற்ற முனிவர்களின் நலனை மனதில் வைத்துக்கொண்டு ஸ்ரீமன் நாராயணனுக்கு தான்கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்காகவே இருக்கட்டும் என எண்ணிய துர்வாசர் கூறினார் ‘சரி, நான் கொடுக்க உள்ள சாபமும் ஸ்ரீ ஹரி ஆகிய உங்கள் மீதே விழட்டும். அதன்படி நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்க வேண்டும்’ அப்படி பொது நன்மையை மனதில் கொண்ட வணிணம் துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது. அதில் ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம்.

ஒரு முறை ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை மகாவிஷ்ணு கொல்ல வேண்டி இருந்தது. அதனால் ஹிரண்யாக்ஷனின் சகோதரனான ஹிரண்யகசிபு விஷ்ணு மீது கடும் கோபமுற்று  அவரை கொல்ல தருணம் பார்திருந்தான். அதற்காக பிரும்மாவிடம் பெரும் வரம்பெற்றான் . அந்த வரத்தின்படி உலகில் அவனுக்கு எவராலும் மரணம் ஏற்படாது. காலையிலோ, மாலையிலோ, இரவிலோ எந்த சமயமும் அவன்பூமியின் மீதோ, ஆகாயத்திலோ, நீரிலோ,பூ மிக்கு அடியிலோ இருந்தாலும், எந்த ஆயுதத்தினாலும், தாய் வயிற்றில் பிறக்கும் எந்த மனிதனோ , மீருகமோ, கடவுளோ கொல்ல முடியாது. அந்த வரத்தைப் பெற்றிட அவன் தவத்தில் இருந்த பொழுது, அவனுடைய நாட்டை இந்திரனும் மற்ற தேவர்களும்  நரசிம்மர்சூறையாடிவிட்டனர். அந்த நேரத்தில் ஹிரண்யகசிபுவின் கர்பிணி மனைவியை நாரதர் காப்பாற்றி, அவளுடைய கருவில் வளர்ந்து வந்த பிரகலாதனுக்கு விஷ்ணு மீது பக்தி ஏற்படக் காரணமாகிறார். பிரகலாதனுடைய விஷ்ணு பக்தியினால் கோபமுற்று அவரை அவமானப்படுத்த எணிணிய ஹிரண்யகசிபு, விஷ்ணு இருப்பதாக பிரகலாதன் கூறிய ஒரு தூணை எட்டி உதைக்க, அந்த தூணில் இருந்து பாதி மனிதனும், பாதி மிருகமுமான உடலைக்கொண்ட நரசிம்மர் தோன்றி தன்னுடைய நகத்தினால் அவன் உடலைக் கீறி அவனை அழித்தார். அந்த அவதாரம் மூலம், ஹிரண்யகசிபு பெற்றிருந்த வரத்தை மிறாத வகையில் மனிதனும், மிருகமும் அல்லாத, தூணில் இருந்து பிறந்த , ஆயுதம் இல்லாமல் நகத்தினால், காலையும், மாலையும் இரவும் அற்ற அவற்றின் இடையிலான காலத்தில் அவனை வதம்செய்தார். அதன் பின்னும் அவருடைய கோபம் அடங்காமல் பொக லஷ்மி தேவியும், சிவபெருமானும் அவரிடம் வேண்டிக் கொண்டு அவருடைய கோபத்தை அடக்குகின்றனர். விஷ்ணுவின் வாகனமான கருடன் தன்னுடைய ஆசானை நரசிம்ம உருவில் தரிசிக்க விரும்பினார் . அதை ஏற்று அவருக்கு நரசிம்ம-லஷ்மி சமேதமாக அஹோபலத்தில் காட்சி தருவதாக ஐதீகம் உள்ளதினால் அங்கு அவருக்கு ஆலயம் அமைந்தது.

அவருக்கு சுமார் 38இடங்களில், தமிழ்நாடு, ஆந்திரா , கோவா, மகராஷ்டிரா, கர்னாடகா, கேரளா, ராஜஸ்தான் பொன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் சோழசிம்மபுரம் அல்லது கடிகாசலம் என்கின்ற சோழிங்கூரில் உள்ள யோக நரசிம்மர் ஆலயம் விஷேசமானது . அங்கு இருபத்தி நான்கே நாழிகை (நிமிடம்) தங்கி இருந்தால் போதும், மோட்சம் நிச்சயமாக கிடைக்குமாம். தர்மபுரியில் உள்ள யோக நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்மர் தவத்தில் உள்ள காட்சியில் தாரிசனம் தருகின்றார் . மகாபாரதப் போரில் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக இருந்ததினால் போர்களத்தில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் அவர் போர்களத்தில் வீரனாக இருந்ததினால்; ஆணுக்கு அழுகு மீசை என்பது பொல காயப்பட்ட முகத்துடனும், மீசையுடனும் பார்த்தசாரதியாக மகாவிஷ்ணு திருவிளக்கேணி ஆலயத்தில் காட்சி தருகின்றார் .சென்னையில் இருந்து நாற்பது கிலோ தூரத்தில் உள்ள திருவிடான்தை என்ற ஊரில் உள்ள ஆலயத்தில் குடி கொண்டு உள்ள மகாவிஷ்ணு தன்னுடைய பக்தரான கவால மகரிஷியின் 360மகள்களை தினமும் ஒருவள் என ஆண்டு முழுவதும் திருமணம் செய்து கொண்டு நித்ய கல்யாண நாயகராக காட்சி தருகின்றார்.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடி ...

கவலை அளிக்கும் டிஜிட்டல் மோசடிகள் – மோடி பேச்சு 'டிஜிட்டல்' மோசடிகள், 'சைபர்' குற்றங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பங்களால் அரங்கேறும், ...

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினம் ​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர்1ஆம் தேதிஅனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரல ...

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் -ஜிதேந்திர சிங் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் ...

சிறுபான்மையினரை பாதுகாக்ககும் பொறுப்பு வாங்க தேசத்துக்கு உள்ளது – ஜெய் சங்கர் வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...