பாகிஸ்தானில் வசித்து வரும் ஹிந்துக்கள் பல துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது தொடர்பாக அந்நாட்டு தூதரை அழைத்து நமதுகண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது .
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து 150-க்கும் அதிகமானோர் அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக் கிழமை தப்பிவந்தது குறித்து மக்களவையில் பாஜக கவலை தெரிவித்துள்ளது . ராஜ்நாத் சிங் பேசியதாவது :÷ பாகிஸ்தானில் சிறுபான்மை யினரான ஹிந்துக்களும், சீக்கியர்களும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையில் இருக்கின்றனர் .
அந்த நாட்டிலிருந்து ஏற்கெனவே தப்பிவந்த 20 பேர், இந்திய குடியுரிமையை கோரி விண்ணப்பித்து உள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு யாத்திரை வந்த 250 பேரிடம், பாகிஸ்தான் சிறுபான்மையினரின் துயரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்க கூடாது என உறுதி மொழி பெறப்பட்டதாக தெரிகிறது .
பாகிஸ்தானில் ஹிந்து_இளைஞரை மதம் மாற்றிய சம்பவம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. அதைத்தொடர்ந்து இளம் பெண் ஒருவரை கடத்தி, மத மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் வெளிவந்தது. இவைதொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்க தூதரக அலுவலகங்களில் ஹிந்து அமைப்பு களின் தலைவர்கள் புகார்தெரிவித்துள்ளனர்” என்றார்.
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.