திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிற மதத்தினர் வேலை செய்ய கூடாது என்று இந்து சமைய அறிஞர்கள் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காகி நாடா ஸ்ரீவிடம் சுவாமி பரி பூர்னானந்தா தலைமையில் பக்தர்கள் திருப்பதியில் இருக்கும் திருமலை தேவஸ்தான அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீ காளகஸ்தி ஆசிரமத்தை சேர்ந்த ராமானந்த சுவாமி, ஸ்ரீ காளகஸ்தி அகபிரம்ம ஆசிரம சுவாமி, கைலாசகிரி சுவாமி, பரபிரம்ம சுவாமி, ராமானந்த சுவாமி, வியாசாஸ்ரம சுவாமி, நெல்லூர் தயானந்த சுவாமி, மார்கண்டே யானந்தா சுவாமி, பிரகாசம் மாவட்டம் மொசல்தூர் கிருஷ்ணானந்த சுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது ; கிறிஸ்தவர்களுக்கு வாடிகனும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும், ஆன்மீக மையங்களாக இருப்பதை போன்று இந்துக்களுக்கும் திருமலை திருப்பதியை ஆன்மீகமையமாக அறிவிக்கவேண்டும். இதற்கு ஆதரவுதெரிவிக்கும் கட்சிக்கே வரவிருக்கும் தேர்தலில் ஆந்திராவிலிருக்கும் நான்கு கோடி இந்துக்களும் வாக்களிப்பார்கள்.
திருப்பதிகோவிலில் பிற மதத்தினரை பணியில் அமர்த்தகூடாது. ஏற்கனவே பணியிலிருந்தால் வேறு இடங்களுக்கு அவர்களை மாற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.