பயம் , பதற்றத்துடன் அலறியடித்து கொண்டு அப்பாவி மக்கள் கூட்டம் ரயில் நிலையத்தை முற்றுகை இடுகிறது, ஒண்ட ஒரு சிறு இடம் கிடைத்தால் போதும் என்று நெருக்கியடித்து ரயிலில் ஏறுகிறது , இரண்டு சிறப்பு ரயில் வேறு இயக்க படுகிறது, பதற்றம் கலந்த சோகத்துடன் தங்கள் சொந்தங்களை நோக்கி பயணிக்கிறது . இது ஏதோ
எகிப்த்தில் நடந்துவிடவில்லை, ஆப்க்கானிஷ்தானில் நடந்துவிடவில்லை , இந்தியன் இந்தியாவுக்குள்ளேயே பாதுகாப்பு தேடி ஒரு பகுதில் இருந்து மற்ற்றொரு பகுதிக்கு ஓடிகொண்டிருக்கிறான் ,
அஸ்ஸாமில் போடோ பழங்குடியினருக்கும் பங்களாதேஷிலிருந்து குடியேறிய சிறுபான்மையினருக்கும் இடையேயான மோதலையடுத்து, வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ் மூலம் வதந்தி பரப்பபட்டது . இதை தொடர்ந்து பெங்களூர், ஹைதராபாத் , சென்னை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள், இதுவரை சுமார் 40,000 க்கும் அதிகமான வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு ரயில் மூலம் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இது இந்திய மக்களுக்கும் , இந்திய அரசுக்கும் ஒரு மாபெரும் அவமானமே. வடகிழக்கு மாநிலத்தவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை , அவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்ப்படுத்த முடியவில்லை , அவர்களுக்கு சிறப்பு ரயிலை ஏற்ப்பாடு செய்து வழியனுப்பி வைக்கத்தான் முடிந்தது. ஒரு எம்.எம். எஸ்., எஸ்.எம்.எஸ். மற்றும் ஒரு சில மிரட்டல்களின் மூலம் பல லட்சம் மக்களை பீதியடைய வைக்க முடியுமா?, பலாயிரம் மக்களை ஒரே நேரத்தில் இடம் விட்டு இடம் மாற்றத்தான் முடியுமா ?.
அப்படி முடியும் என்றால் ஆளும் அரசு சாதாரண மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது என்று அல்லவா அர்த்தம். இது அசாம் , மணிபூர் மற்றும் மத்திய ஆளும் காங்கிரஸ் அரசின் சீர்கெட்ட நிர்வாகத்தின் மொத்த வெளிப்பாடே . அசாமில் தங்கள் சொந்த மண்ணிலேயே தங்களுக்கு பாதுகாப்பு தரமுடியவில்லை எனும்போது , எப்படி நாட்டின் பலபகுதிகளில் தனியாக வசிக்கும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்ற எண்ணத்தின் வெளிபடக கூட இருக்கலாம் .
ஒவ்வொரு இந்தியனும் இந்த பாரத தேசத்தின் எந்த ஒரு பகுதியிலும் பயம் இன்றி பாதுகாப்புடன் வாழும் உரிமையை பெற்றவனாகிறான். அதே போன்று அவனது உரிமையை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையும் கூட . ஆனால் பலாயிரம் பேர் தங்கள் உரிமையை நிலை நாட்ட முடியாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள் என்றால் , இந்த அரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டதா ?, பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் சட்டவிரோத அரசு என்னும் கருத்து உண்மையகிறதா? .
அஸ்ஸாம் இன கலவரத்தில் நிகழ கூடாதது நிகழ்ந்தது. அப்பாவிகள் பலர் பலியாகினர் இதை கண்டுகூட பங்களாதேஷிகள் யாரும் பீதியடைந்து அலறியடித்து கொண்டு தங்கள் தாய் மண்ணை நோக்கி சென்றதாக தெரியவில்லையே , ஆனால் ஒரு சிறு எம்.எம். எஸ்., எஸ்.எம்.எஸ்,.சை கண்டு வடகிழக்கு மாநிலத்தவர்கள் ஓடி கொண்டிருக்கிறார்கலே . பங்களாதேஷிகளின் நம்பிக்கையை பெறமுடிந்த இந்த காங்கிரஸ் அரசால் வடகிழக்கு மாநிலத்தவர்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லையே அது ஏன்?
"வடகிழக்கு மாநில சகோதர , சகோதரிகளே இந்த தேசம் உங்களுடையது , நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம், உங்களை நாங்கள் பாதுகாப்போம்" எனும் சுஷ்மா சுவராஜ்ஜின் குரலே நமது குரலும் கூட
தமிழ் தாமரை VM . வெங்கடேஷ்
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.