பிரதமர் மன்மோகன்சிங் பதவியை ராஜிநாமா செய்யும்வரை நாடாளு மன்றத்தை முடக்குவது தொடரும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கைய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது :நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடிவரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார் . இந்த இழப்பு தொடர்பான முறை கேட்டுக்கு பொறுப் பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும். பிரதமர் பதவி விலகும்வரை நாடாளுமன்றத்தை முடக்குவதுதொடரும். திங்கள்கிழமையும் நாடாளுமன்றத்தை முடக்கி எதிர்ப்புக் குரல் எழுப்புவோம்.
இந்தவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதால் பயன் ஏதுமில்லை .அலைக்கற்றை ஊழலின் போதுகூட, தவறு எதுவும் நடை பெறவில்லை என காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது .ஆனால், அதனை_ஏற்காமல் நாடாளு மன்றத்தை பாரதிய ஜனதா முடக்கியது. அதன் பின்பே அலைக்கற்றை ஊழலில் பலஉண்மைகள் வெளிவந்தன. அதே முறையைத்தான் இப்போதும் கடைப்பிடிக்கிறோம் என்றார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.