நாட்டையே உலுக்கி வருகிறது நிலக்கரி சுரங்க ஊழல். . பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. இந்நிலையில் ஒரே ஒரு தனிநபரிடம் மட்டும் 14 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன என்ற ஆச்சரியத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தநபரின் பெயர் உஜ்ஜால் உபாத்யாய். இவர் ஆரம்பத்தில் படுசாதாரணமான மனிதராக இருந்தவர். மணல் லாரி உரிமையாளராக மட்டுமே_இருந்தவர். இந்திய நிலக்கரி கழகத்திற்கு மணல்லோடு அனுப்பி வரும் சாதாரண சப்ளையர்மட்டுமே. ஆனால் இன்று இவரது நிறுவனமான இ.எம்.டி.ஏ (Eastern Mineral and Trading Agency) இன்று இந்தியாவிலேயே மூன்றாவது மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமாக திகழ்கிறது என்பது ஆச்சரியத்திலும் பெரும்ஆச்சரியமாகும்.
இந்திய நிலக்கரிகழகம், நவீன் ஜின்டாலின் குழு மம் ஆகியவற் றுக்கு அடுத்த இடத்தில் உஜ்ஜாலின் நிலக்கரி நிறுவனம் உள்ளது என்பது வியப்புக்குரிய ஒன்று.
இந்த 14 நிலக்கரி சுரங் கங்களும் பணம்காய்ச்சி மரமாக மாறியுள்ளது உஜ்ஜாலுக்கு. நிலக்கரி தொழிலுக்கு மாறிய பின்னர் இந்தமுன்னாள் மணல் லாரி உரிமையாளரின் காட்டில் பணமழைதான். 2011-12 நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ. 1000 கோடியாகயாகும் .
மிக சாதாரணமான நிலையிலிருந்து மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்தவர் இந்த உஜ்ஜால். இது தான் பலரையும் வியப்பி்ல் ஆழ்த்தியுள்ளது. பலகேள்விகளையும் கிளப்பியுள்ளது.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.