டீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும்

 டீசல் விலை உயர்வால் வேளாண்மைத் துறை மேலும் பாதிக்கப்படும் டீசல் மற்றும் சமையல் எரிவாயுக் கட்டணங்களின் கிடுகிடு உயர்வு அறிவிப்பு விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகும். ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் வேளாண்மைத் துறை, டீசல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்படும். நாடு முழுவதும் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையால்

லட்சக்கணக்கான விவசாயிகள் வயலுக்கு நீர்பாய்ச்ச டீசல் பம்புசெட்டுகளையே நம்பியுள்ளார்கள். இந்த ஐந்து ரூபாய் விலையுயர்வு என்பது முன்னுதாரணமில்லாதது. இந்த விலையுயர்வு டிராக்டர்கள் வாடகைக் கட்டணத்தையும் ஏற்றி, விவசாய மக்களுக்கு பெரும் சுமையையும் ஏற்படுத்திவிடும்

.  ஏற்கனவே வேளாண்மைத் தொழில் என்பது லாபமற்றதாக மாறிவருகிறது. ஏனெனில் வேளாண்மை இடுபொருட்களின் விலை ஏற்றத்தால் விவசாயத்தை விட்டு கிராமப்புற மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயரும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில் டீசல் விலையுயர்வு அறிவிப்பு, நாட்டின் வேளாண்மை சமூகத்தினரின் மீதான நேரடித் தாக்குதலாகும். இதனால் பொருட்களின் விலையுயர்வு மேலும் அதிகரிக்கும். போக்குவரத்துச் செலவுகள் மற்றும் கட்டணங்களின் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும். இது சாதாரண குடியானவனைக் கடுமையாகப் பாதிக்கும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு சிலிண்டர்தான் கொடுக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவு கீழ்நடுத்தர மற்றும் நடுத்தர மக்களை நேரடியாகப் பாதிப்பதாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு சிலிண்டர் சராசரித் தேவையாக உள்ளது. ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் மேல் வாங்குபவருக்கு லெவிக் கட்டணமாக ஒரு சிலிண்டருக்கு 746 ரூபாய் விதித்திருப்பது குரூரமான நகைச்சுவையாகும். இது இந்நாட்டில் நடந்தேயிராத ஒன்றாகும். விலைவாசி உயர்வால் கடுமையாக மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற நடவடிக்கை இது.

காங்கிரஸ் மக்களுக்கு இப்படி வாக்குறுதி அளித்த்து. “காங்கிரஸின் கை சாமானிய மனிதனோடு இணைந்திருக்கும்”. இதை இனி இப்படி மாற்றுவதே பொருத்தமாக இருக்கும்: “காங்கிரஸின் கை சாமானிய மனிதனின் முதுகில் குத்தும்” விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் நலத்தை முன்னிட்டு டீசல் விலை உயர்வு மற்றும் சிலிண்டர்கள் கட்டுப்பாடு என்ற இரண்டு முடிவுகளையும் அரசு வாபஸ் பெற வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், மக்களோடு நின்று கட்டண உயர்வை வாபஸ் பெறுவதற்கு வற்புறுத்துகிறார்களா அல்லது அதிகாரத்துக்காக்க் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசின் முடிவுகளை ஆதரிக்கப் போகிறார்களா என்பதைக் கண்டுகொள்ளும் சோதனை இது. வெறுமனே வாய் வார்த்தையாக்க் கோரிக்கைகளை விடுத்து, முதலைக் கண்ணீர் வடிப்பது மட்டும் போதாது. மத்திய அரசின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக பாஜக தேசிய அளவில் போராட்டங்களை நடத்தும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராம புறங்களில் பண பரிமாற்றத் ...

கிராம புறங்களில் பண பரிமாற்றத்தின் சேவையை அதிகரிக்க ஏற்பாடு இந்திய அஞ்சலக வங்கி மற்றும் ரியா மணி ட்ரான்ஸ்பர் ...

கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L ...

கண்ணியத்தை காக்கும் மோடி அரசு -L முருகன் பேட்டி விவசாயிகள் கவுரவ நிதி மூலம் அவர்களின் கண்ணியத்தை காக்கும் ...

இந்திய திபெத் எல்லை காவல் படையி ...

இந்திய திபெத் எல்லை காவல் படையின் மீட்பு குழுவிற்கு அமித் ஷா பாராட்டு லாகூல், ஸ்பிட்டி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட ...

17-வது தவணையாக ரூபாய் 20,000 கோடியை ப ...

17-வது தவணையாக ரூபாய் 20,000 கோடியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார் பிரதமரின் உழவர் நல  நிதி உதவித் திட்டத்தின் கீழ் சுமார் ...

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற ...

உத்திரபிரதேசம், பீகார் இன்று மற்றும் நாளை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்கிறார் ரூ.20,000 கோடிக்கும் ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ வ ...

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர்  ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...