ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல்விலையில் லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலையில் லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கப் படும் என, திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய்மட்டும் குறைத்து விட்டு, சலுகை வழங்கியது போல பீற்றி கொண்டனர். டீசல்விலையில், ஒரு ரூபாய் கூட குறைக்காமல் மக்களை ஏமாற்றி விட்டனர்.இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு, பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதனால் மத்திய அரசின் கலா வரியை காட்டிலும், மாநில அரசின் மதிப்புகூட்டு வரி தான் அதிகம் என்றானது. ஆனாலும், மாநில அரசு வரியை குறைக்காதாம். மத்திய அரசு, மாநிலங்களுடன் பகிரும், அடிப்படையான கலால்வரியில், எந்த மாறுதலும் செய்யவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முழுமையாக மறைத்து விட்டு, தாங்கள் மட்டுமே உத்தமர்கள் போல் காட்டி கொள்ளும் திமுக அரசு, போலி வேடம் போடுகிறது.
மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்ற தமிழகபாஜக தலைவர் கே.அண்ணாமலை, இதை பின்பற்றி, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைகுறைக்கவேண்டும் என, வலியுறுத்தி இருந்தார். மேலும், 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், தலைமை செயலகத்தைநோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விதித்த, 72 மணி நேரகெடு, இன்றோடு முடிவடைகிறது. இதையடுத்து, தமிழக பாஜக தலைமை போராட்டம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது.
கெடு முடிந்த பின்னும் தமிழக அரசு, பெட்ரோல், டீசல்விலையை குறைக்காத பட்சத்தில், அறிவித்தபடியே கோட்டையை நோக்கி, பாஜக, பேரணிநடக்கும்; முற்றுகை போராட்டமும் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை, தமிழக பாஜக தொடங்கி விட்டது. ஜூன் முதல் வாரத்தில், பிரம்மாண்டமாக கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |