மோடி பாகிஸ்தானை ஆள வேண்டும் அல்லாவிடம் வேண்டுகிறேன்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடிநிலவும் சூழலில் அந்நாட்டு இளைஞர் ஒருவர், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆளவேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால்மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. இதனால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப் பட்டுள்ளது. ஒருலிட்டர் பால் விலை ரூ.250க்கு விற்பதனையாகிறது. கோழிஇறைச்சி ஒருகிலோ ரூ.700 முதல் 800 வரை உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் வேதனை யடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபரான சனா அம்ஜத் என்பவர், ஒருஇளைஞரிடம், பாக்., பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அரசு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்கிறார். அப்போது அந்நபர் ஷெபாஷ் மீது சரமாரி குற்றச் சாட்டுகளை அடுக்கியதுடன், ‛இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானை ஆளவேண்டும்’ என கடவுளிடம் கேட்பதாகவும், அவரால் மட்டுமே இங்குள்ள நிலைமையை சமாளிக்க முடியும் என்றும் கூறுகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த யூடியூபரிடம் பாக்., இளைஞர் பேசியுள்ளதாவது: பாகிஸ்தானில் பிறக்கக்கூடாது என்று விரும்புகிறேன். பாகிஸ்தான் இந்தியா விலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க விரும்புகிறேன். அப்போதுதான் தக்காளியை கிலோ ரூ.20க்கும், கோழிக்கறியை கிலோ ரூ.150க்கும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50க்கும் வாங்குவோம். எங்களுக்கு ஒரு இஸ்லாமிய தேசம் கிடைத்தது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இங்கு இஸ்லாத்தை நிறுவமுடியவில்லை. இந்திய பிரதமர் மோடி, நம்மை விட சிறந்தவர். அங்குள்ள மக்கள் மோடியை மதிக்கின்றனர், அவரை பின் தொடர்கின்றனர்.

எங்களுக்கு நரேந்திரமோடி கிடைத்தால், நவாஸ் ஷெரீப்போ, பெனசிரோ, இம்ரானோ, முஷரப்போ தேவைப்படாது. எங்களுக்கு தேவை நரேந்திரமோடி மட்டுமே. அவரால் மட்டுமே நாட்டில் நிலவும் மோசமான நிலைமையை சமாளிக்க முடியும். இந்தியா தற்போது உலக பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது.

மோடியின் ஆட்சியின் கீழ் நான் வாழதயார். அவர் ஒரு சிறந்த மனிதர். இந்தியர்களுக்கு தக்காளி, சிக்கன் போன்றவை நியாயமான விலையில் கிடைக்கின்றன. மோடியை நமக்கு (பாகிஸ்தானியர்களுக்கு) கொடுத்து நம் நாட்டை ஆளவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு கண்ணீருடன் அவர் பேசியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் ஒற்றுமையாக இருந்தால் பாது ...

நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களை பல வீனப்படுத்த நினைக்கும் ...

தி.மு.க அரசு பொது மக்களிடையே அவந ...

தி.மு.க அரசு பொது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது – அண்ணாமலை கண்டனம் குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் -தமிழிசை கண்டனம் தமிழகத்தில் டாக்டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பா.ஜ., மூத்த ...

எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரத் ...

எய்ம்ஸ் மருத்துவமனை சுகாதாரத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வரும் – மோடி பேச்சு பீஹார் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது சுகாதாரத் துறையில் ...

அனைவருக்குமான ஒரே அரசை வழங்க ப. ...

அனைவருக்குமான ஒரே அரசை வழங்க ப.ஜ.க, உறுதியாக உள்ளது – அமித்ஷா பேச்சு “நாட்டில் பா.ஜ., இருக்கும் வரை, மத அடிப்படையிலான இட ...

ஜார்கண்டில் ஜனநாயக திருவிழா மோ ...

ஜார்கண்டில் ஜனநாயக திருவிழா மோடி மெசேஜ் ஜார்க்கண்ட் ஜனநாயக தேர்தல் திருவிழாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...