சென்ற வாரத் தொடக்கத்தில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், அவர் உருவாக்கிய ஒரு விசேஷ திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக என்னை போபாலுக்கு அழைத்திருந்தார். இவரது மகத்தான கனவுத் திட்டமான லாட்லி லக்ஷ்மி யோஜனா இவரை மக்கள் விரும்பும் முதல்வராக நிச்சயம் மாற்றும்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி மாலையில், 1000 பேர் புனித யாத்திரை கிளம்பினார்கள். இவர்கள் செல்லும் விசேஷ ரயிலைக் கொடி அசைத்து அனுப்பி வைத்தேன். இது போபாலிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில்.
இந்தத் திட்டத்திற்கு முக்ய மந்த்ரி தீர்த் தர்ஷன் யோஜனா என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் வருமான வரி செலுத்தும் நிலையில் இல்லாத வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
ரயில் நிலையத்தில், கடைசி பெட்டியிலிருந்து, நான் கொடியசைத்து தொடங்க வேண்டிய முன் பக்கத்திற்கு முதலமைச்சருடன் நடந்து வந்துகொண்டிருக்கும்போது, ரயிலில் அமர்ந்திருந்த பயணிகளைப் பார்த்தேன். அவர்கள் பெரும்பாலும் தம்பதியினராக இருந்தனர். இப்படிப்பட்ட அரிய பெரும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்துள்ளதை நினைத்துப் பரவசத்துடன் காணப்பட்டனர்.
போபால் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், மூத்த குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. கிட்டத்தட்ட 11,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். குலுக்கல் முறையில் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமிருக்கும் 10,000 பேரும் காத்திருக்கும் பட்டியலில் இருப்பார்கள். அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும்.
17 புனித ஸ்தலங்கள் மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கேதார்நாத் (உத்தர்காண்ட்), துவாரகாபுரி (குஜராத்), ஜகன்னாத் புரி (ஒரிஸா) ஆகியவையும் அடங்கும். ராமேஸ்வரம் உட்பட நாட்டின் நான்கு மூலைகளிலும் உள்ள முக்கியமான இடங்களை உள்ளடக்கியதாக இந்தப் பயணம் அமையும்.
அஜ்மீர் ஷாரிஃப் (ராஜஸ்தான்), அமிர்தஸரஸ் (பஞ்சாப்), ஸம்மீத்ஷிகார்ஜி (ஜார்க்கண்ட்), ஷ்ரவண பெலகோலா (கர்நாடகம்), வேளாங்கண்ணி தேவாலயம், நாகப்பட்டினம் ஆகியவை. இவை முஸ்லீம்கள், சீக்கியர்கள், ஜைன மதத்தினர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான புனித ஸ்தலங்கள் ஆகும்.
மீதமுள்ள எட்டு இடங்கள், வைஷ்ணவா தேவி மற்றும் அமர்நாத் (ஜம்மு & காஷ்மீர்), திருப்பதி (ஆந்திரா), பத்ரிநாத் மற்றும் ஹரித்வார் (உத்தர்காண்ட்), காசி (உத்திர பிரதேசம்), ஷிர்டி (மஹாராஷ்ரா) மற்றும் கயா (பிஹார்). இந்தத் திட்டத்தில் போகப் போக, புனித ஸ்தலங்களின் பட்டியலில் மேலும் பல இடங்கள் சேர்ப்பதைப் பற்றியும் யோசனை உள்ளது என்று முதலமைச்சர் என்னிடம் குறிப்பிட்டார்.
2013 மார்ச் 31ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ரயில்களுக்காக ரயில்வே அதிகாரிகளுடன் மாநில அரசு, எம்.ஓ.யு. வில் (புரிந்துண்ர்வு ஒப்பந்தம்) கையொப்பமிட்டுள்ளது.
**
பி.ஜே.பி. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் அவற்றின் முதல்வர்கள், தம் மாநில மக்களின் நலனுக்காக என்னென்ன புதுமையான திட்டங்களைத் தீட்டி, நடைமுறைப்படுத்தலாம் என்பதைப் பற்றி எப்போதும் சிந்தித்துக்கொண்டிருப்பதை நினைத்து நான் பெருமையடைகிறேன்.
நான் சென்ற வாரம் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் உள்ள மஹாத்மா மந்திருக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள மிகப் பெரிய அரங்கில் நமது உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த நிகழ்ச்சியில், 3900 பள்ளிச் சிறுமிகள் அவர் முன்னிலையில் உலக சாதனை படைப்பதற்கான முயற்சியில் நாள் முழுவதும் செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர்.
முதலமைச்சர் நரேந்திர மோடி அங்கு கூடியிருந்தோரிடையே பேசினார் :
சட்டசபைத் தேர்தல்கள் நெருங்குவதால், வாக்களிப்பவர்களைக் கவரும் வண்ணம் நாம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்று என்னிடம் சிலர் சொன்னார்கள். இந்த நிலையில் முதலமைச்சர் பள்ளிக் குழந்தைகளுடன் இவ்வளவு நேரம் ஏன் செலவழிக்க வேண்டும்?
மோடி மேலும் கூறினார்:
பள்ளிக் குழந்தைகள் வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள்தான் குஜராத்தின் எதிர்காலம். எனவே, அவர்களுடைய முன்னேற்றத்திலும், சாதனைகளிலும் எனக்கு மிகவும் அக்கறை உள்ளது.
தயானி தேவ் என்கிற ஒரு சிறுமி தொடர்ந்து 150 சிறுமிகளுடன் விளையாடி அதில் 132 பேரைத் தோற்கடித்துள்ளாள்.
லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அமைப்பிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு சாட்சிகளாக வந்திருந்தவர்கள் இந்த நிகழ்வைக் கண்டு அதைத் தங்கள் அடுத்த தொகுப்பில் இந்த நிகழ்வைச் சேர்த்தார்கள்.
இந்த வருடத்தின் லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் ஏற்கெனவே பொதுவான சாதனைகள் அடங்கிய 289 பக்கங்களைக் கொண்டுள்ளது. வயதோ, பாலினமோ இதற்குத் தடையில்லை. இந்த நிகழ்ச்சியைப் பற்றி இதில் பின்வருவமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
டபிள்யு.ஆர்.: ஒரே இடத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான செஸ் விளையாட்டு வீரர்கள்
குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் 2010-ஆம் ஆண்டின் ஸ்வர்ணிம் செஸ் மஹோத்ஸவ் விழாவை ஒட்டி, 2010, டிசம்பர் 24-ஆம் தேதி, சுமார் 20,500 விளையாட்டு விரர்கள் தொடர்ந்து விளையாடுவது என்ற உலக சாதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுடன் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
பின் குறிப்பு; பொது வாழ்க்கையில் மிகப் பெரிய குற்றம் ஊழலா, முட்டாள்தனமா? பொறுமையாக யோசித்து பதில் சொல்லுங்கள். ஊழல் அரசியல் ரீதியான மரன தண்டனை போன்றது என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் பெரும்பான்மையானவர்கள் 2009ஆம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஒருவேளை ஊழல் அதன் அளவைப் பொருத்து மதிப்படப்படுகிறது போலும்; ஊழல் கட்டுக்கடங்காமல் பெருகி, தாங்கள் கொள்ளையடிப்ப்படுகிறோம் என்று வாக்காளர்கள் உணரும்போதுதான், பொங்கி எழுகின்றனர். இதற்கு மாறாக, முட்டாள்தனமான நட்த்தையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். காரணம், பிறரது பரிகாசம் என்பதுதான் அதற்கான தண்டனை. நீதிமன்ற தண்டனையைவிட, நகைப்புக்குள்ளாவது என்பது நற்பெயருக்கு அதிகம் களங்கம் விளைவிக்கக்கூடிய ஒன்று.
டாக்டர் மன்மோஹன் சிங்கின் ஊடக ஆலோசகர் ஒருவர், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் செய்தியாளர் சைமன் டேனியர் இந்தியப் பிரதமரைப் பற்றி அநாகரிகமான முறையில் விமர்சனம் செய்து பத்திரிகையில் கட்டுரை எழுதியது, மன்னிக்க முடியாத குற்றம் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறி, அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அவரைத் தாக்கி செய்தி வெளியிட்டார். இவர் இப்படி நடந்துகொண்டது, இந்திய ஊடகங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று நினைத்துவிட்டார். இந்த நடவடிக்கை டேனியரை மட்டம் தட்டுவதற்காக என்று அவர் நினைத்திருந்தால் அது தவிடுபொடியாகிவிட்டது. ஒருவேளை இதன் மூலம் இந்திய ஊடகங்களை பயமுறுத்தும் நோக்கம் இருந்திருந்தால், அதுவும் தப்புக்கணக்காகிவிட்டது. காரணம், எவர் கவனத்தையும் பெரிதாக கவர்ந்திருக்காத ஒரு சாதாரண கட்டுரை, இந்த நிகழ்ச்சிக்குப் பின் அனைவரது கவனத்தையும் மிகப் பெரிய அளவில் கவர்ந்துவிட்டது. இந்த அதிகாரியின் இத்தகைய நடத்தை, பிரதமரை உலகளவில் நகைப்புக்குரிய பிரதமராக அனைவரும் கருதும்படி செய்துவிட்டது. உதவி செய்ய வேண்டியவரே உபத்திரவமாக மாறுவதற்கு இது பொருத்தமான உதாரனமாகிவிட்ட்து.
ஊடகத்தை "கையாள" அரசாங்கம் நியமிக்கக்கூடிய மிக மோசமான நபர்
ஒரு "பத்திரிகையாளர்தான்". அவர் உங்களைவிட புனிதராக மாறிவிடுகிறார்.
ஒரு அவதூறான கட்டுரைக்குப் பதிலடி கொடுக்கச் சொன்னால் அவர்
அதை எழுதியவருக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இறங்கிவிடுவார்.
சன்டே கார்டியன் – எம்.ஜே. அக்பர்
நன்றி ; எல்.கே.அத்வானி
You must be logged in to post a comment.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
2productive