பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு வெளிநாட்டினரின் நலனுக்காக, வெளிநாட்டினரால், வெளிநாட்டினருககாக நடத்தப்படுகிற அரசு என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் சில்லரை வர்த்தகத்தில் 51% நேரடி அந்நியமுதலீடு மற்றும்
இந்தியாவின் வட கிழக்கு எல்லையில் சட்ட விரோத குடியுரிமை போன்றவற்றிற்கும் அனுமதி வழங்கியதையும் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அதிகரிப்பினால் உள்நாட்டு வணிகர்களும், தொழில்களும் அழியகூடிய ஆபாயம் உருவாகியுள்ளது.
எந்த வெளிநாட்டி னரும் இனி இந்திய பொருள்களை வாங்க முடியாமல் போகும்; இந்திய வணிகர்கள் உதவியில்லாமலும், ஏராளமான மக்கள் வேலையிழக்கும் நிலையும் உருவாக உள்ளது; மக்களால் மக்களுக்காக மக்களை கொண்டு நடத்தப் படும் ஆட்சி என்பது ஆபிரகாம் லிங்கன் அவர்களின் ஜனநாயகக் கொள்கையாகும்; ஆனால் மன்மோகன்சிங்கின் ஜனநாயக கொள்கை என்பது வெளிநாட்டினர் களால் வெளிநாட்டினருக்காக வெளிநாட்டினர்களை கொண்டு நடத்தப்படுவதாகும் என்று நரேந்திரமோடி கடுமையாக குற்றம்சாட்டினார்
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.