புத்தரின் பெயரில் அமைந்த பல்கலைக் கழகத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அடிக்கல்நாட்டியிருப்பது புத்தருக்கே அவமானம் என தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மேலும்
தெரிவித்ததாவது – ம.பி. மாநிலம் சாஞ்சியில் அமைக்கபட்டுள்ள புத்தமத பல்கலைக் கழகத்தின் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு இலங்கை அதிபர் ராஜ பக்சே மற்றும் பூடான் பிரதமர் ஜிக்மேயோசர் தின்லே போன்றோர் வர மத்திய அரசு அனுமதி தந்தது .
அடிக்கல்நாட்டு விழாவில் ராஜபக்சேவின் பேச்சுக்கள் வேதாளம் வேதம் ஓதுவது போன்றே அமைந்துள்ளன. தம்சொந்த நாட்டின் மக்கள் மீதே வஞ்சம்நிறைந்த நெஞ்சும், விரோத மனப்பாவமும், மதங்களின் மீதான வெறுப்பும்கொண்டு தன் ராணுவத்தை கொண்டே தமிழர்களின் மீது வன்முறையை கட்ட விழ்த்துவிட்டு பெரும்அழிவை உருவாக்கி நம் தமிழ் சமுதாயததை கருவறுத்த இலங்கை அதிபர் ராஜ பக்சே கிழக்கத்திய , மேற்கத்திய நாடுகளுக்கு சகிப்புத் தன்மை முக்கியம் என பேசி உள்ளார்.
உலகமக்களுக்கு அகிம்சையை போதித்த புத்தபிரானின் பெயரால் அமைந்த பல்கலை கழகத்துக்கு தமிழனின் ரத்தக் கறை படிந்த பாழ்க் கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது, புத்தருக்கேஅவமானம்.
அகிம்சா மூர்த்தியான காந்திஜியின் பெயரைக்கூட உச்சரிக்க அருகதை அற்ற ராஜபக்சே அகிம்சை, அமைதி பரப்ப வேண்டிய கடமை பற்றி பறைசாற்றி உள்ளார். இலங்கை தமிழர்களின் அறிவுசார் முன்னேற்றத்தை தாங்கமுடியாமல் இரக்க மற்ற முறையில் செயல்பட்ட ராஜபக்சே இந்தியநாட்டுக்கு போதனை வழங்கி இருப்பது நம்நாட்டிற்கே கலங்கத்தை உருவாக்கும் .
உலக நாடுகளினால் போர் குற்றவாளியாக எண்ணப்படும் ராஜபக்சே, இந்திய அரசு காமன் வெல்த் விளையாட்டு, 20-20 கிரிக்கெட்போன்ற அலங்கார விழாவுக்காக மட்டும் அழைக்கும் அசிங் கத்தை, இனி வரும் காலத்தில் எந்த காரணம் கொண்டும் அரங்கேற்றக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.